டைட்டிலுக்கும் கதைக்கும் சம்பந்தமே இல்லாமல் படம் எடுக்கும் டைரக்டர்களுக்கு மத்தியில் நடிகர் பிரகாஷ்ராஜ் தனது பேனரில் எடுக்கும் எல்லாப் படங்களின் டைட்டிலையும் அர்த்தத்தோடு தான் வைப்பார்.
அந்த வரிசையில் அவர் டைரக்ட் செய்து நடித்திருக்கும் புதிய படம் தான் ‘உன் சமையலறையில்…’
தேஜஸ்- சம்யுக்தா என்ற இரண்டு புதுமுகங்களுடன் தன்னுடன் இந்தப் படத்தில் முதல்முறையாக சினேகாவையும் நடிக்க வைத்திருக்கிறார் பிரகாஷ்ராஜ்.
”சினேகாவோட நடிக்கணும்னு பலதடவை நான் முயற்சி பண்ணினேன். ஆனால் என்ன காரணமோ தெரியல. அது நடக்கவே இல்லை. இந்த படத்தில் தான் அது நடந்துருக்கு. இந்தப் படத்தில் அவருடைய கேரக்டர் அவ்ளோ பொருத்தமா இருக்கும். ‘புன்னகை அரசி’ங்கிற பேருக்கு ஏத்தமாதிரி ஏற்கனவே சிரிச்சா சினேகா அவ்ளோ அழகா இருப்பார். இப்போ அந்த அழகுக்கு கூடுதல் அழகு சேர்க்க கண்ணுக்கு கண்ணாடி போட்டு விட்டிருக்கோம். அது பார்க்க இன்னும் அழகா இருக்கும்” என்றவர் பேச்சை இசைஞானி இளையராஜா பக்கம் திருப்பினார்.
இந்தப் படத்துக்காக பழனிபாரதி ஒரு பாடல் எழுதின பேப்பரை இளையராஜாகிட்ட வாசிக்க கொடுத்தேன். சில் நிமிடங்களிலேயே அதுக்கு ட்யூன் போட்டு பாடிக்காட்டிட்டார். அந்த வகையில் அவர் கூட வேலை செய்றதுல அவ்ளோ சந்தோஷம். அதையும் தாண்டி நான் இன்னைக்கு அமைதியா, டென்ஷனே இல்லாம, நிதானமா இருக்கேன்னா அதுக்கு இளையராஜா தான் முக்கிய காரணம் என்றார்” சொல்லும் போது முகத்தில் அப்படி பிரகாஷ்ராஜ் முகத்தில் அப்படி நெகிழ்ச்சி.
















