பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட கோபி என்பவருக்கு ஜெயக்குமாரி தனது வீட்டில் அடைக்கலம் வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அது மட்டும் அல்லாமல் பாலேந்திரன் ஜெயக்குமாரி, பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் இலங்கைக்கு பயணம் செய்திருந்த போது, போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்தியவர் என கொழும்பு ஊடகம் குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் பிரிட்டன் பிரதமர் டேவிட் கமருன் பங்கேற்ற போது வடக்கிற்கு பணயம் செய்திருந்தார். இதன் போது, ஜெயகுமாரி கமருனிடம் முறைப்பாடு செய்துள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாகவும், இராணுவத்தினர் இளைஞர்களை கடத்துவதாகத் தெரிவித்து ஜெயகுமாரி, பிரிட்டன் பிரதமரிடம் மகஜர் ஒன்றை சமர்ப்பித்ததாகவும் அந்த ஊடகம் குற்றச்சாட்டுக்களை தொடராக முன்வைத்துள்ளது. இதன் மூலம் ஜெயக்குமாரியை தொடர்ச்சியாக தடுத்து வைப்பதன் மூலம் சர்வதேச விசாரணையின் போது உள்நாட்டில் சாட்சி அளிக்க முன்வருவோருக்கான எச்சரிக்கையை பாதுகாப்பு தரப்பு ஊடக செய்திகள் மூலம் வெளிப்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
















