இந்தியாவில் உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஆறு வயது சிறுவன் ஒருவனுக்கு ஒரு அடி நீள வால் அவனது பின்பகுதியில் முளைத்துள்ளது. வால் முழுவதும் தலைமுடி போன்று காணப்படுகிறது. அந்த பகுதி மக்கள், அந்த சிறுவனை கடவுளின் அவதாரமாக கருதுகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த Nijmapur என்ற கிராமத்தை சேர்ந்த Amar Singh என்ற ஆறு வயது சிறுவனுக்கு பிறக்கும்போதே spina bifida என்ற குறைபாடு இருந்துள்ளது. இதன் காரணமாக அவனது பின்புறம் வால்போன்ற ஒரு பகுதி வளர்ந்து கொண்டே வந்துள்ளது. இதை பார்த்த அவனது பெற்றோர்களும், உறவினர்களும் அந்த சிறுவனை கடவுளின் அவதாரமாக கருதி வளர்த்து வருகின்றனர். தற்போது அந்த சிறுவனின் வால் 12இன்ச் வளர்ந்துள்ளது.
Amar Singh என்ற சிறுவனின் பெற்றோர்கள் தங்கள் மகன் இந்துக்கள் புனிதமாக வழிபடும் ஹனுமானின் அவதாரம் என்று கருதுகின்றனர். அவர்களது உறவினர்களும், அந்த ஊர் மக்களும் இதை பரிபூரணமாக நம்புகின்றனர். தலைமுடி போல் இருக்கும் அந்த வாலை மிக எளிதாக வெட்டிவிடலாம், அல்லது ஷேவ் செய்துவிடலாம். ஆனால் சிறுவனின் பெற்றோர்கள் அதை செய்ய விரும்பவில்லை. அந்த முடிபோன்ற வாலை வெட்டினால் தாங்கள் கடவுளால் தண்டிக்கப்படலாம் என கருதுகின்றனர்.
ஆனால் சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், இது பிறவியிலேயே ஏற்பட்ட spina bifida என்ற குறைபாடுதான் என்றும், இதனால் எவ்வித பாதிப்பு இருக்காது. முடிபோன்ற வாலை வெட்டினால் அந்த சிறுவன் நார்மலாகத்தான் இருப்பான் என்கின்றனர்.
















