தென்கொரிய பயணிகள் கப்பல் மூழ்கியது. 100 பள்ளி மாணவர்கள் உள்பட 470 பயணிகளின் கதி என்ன?

shipதென்கொரியாவில் பயணிகள் கப்பல் ஒன்று திடீரென மூழ்கியதால் அதில் பயணம் செய்த 470 பயணிகளின் கதி என்ன என்பது குறித்து அந்நாடு பெரும் கவலையில் மூழ்கியுள்ளது. சம்பவ இடத்திற்கு தென்கொரிய அதிபர் உடனடியாக மீட்புப்பணிகளை அனுப்பி வைத்துள்ளார். இதுவரை 4 பிணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 300 பேர் வரை காணவில்லை என அஞ்சப்படுகிறது. மேலும் இந்த பயணிகள் கப்பலில் நூற்றுக்கணக்கான பள்ளிக்குழந்தைகள் சுற்றுலாவுக்காக சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்கொரியாவின் Ferry என்ற பயணிகள் கப்பல் இன்று காலை திடீரென கடலில் மூழ்குவதாக வந்த தகவலை அடுத்து 12 மீட்பு படகுகளும், 16 ஹெலிகாப்டர்களும், நூற்றுக்கணக்கான நீச்சல் வீரர்கள் அடங்கிய மீட்புக்குழுவினர்களும் கப்பல் விபத்துக்குள்ளான இடத்திற்கு விரைந்தனர். அங்கு தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த பலரை காப்பாற்றியுள்ளனர். 4 பேர்களின் உடல்கள் கைப்பற்றியுள்ள மீட்புப்படையினர், பலி எண்ணிக்கை இன்னும் உயரும் என அச்சத்துடன் தெரிவித்துள்ளனர்.

Byeongpoong island அருகே Ferry என்ற இந்த கப்பல் கிட்டத்தட்ட முழுவதும் மூழ்கிவிட்டதாகவும், கப்பலில் எவ்வளவு பேர் சிக்கியுள்ளனர் என்பது தெரியவில்லை என்றும் The South Korean Coast Guard அச்சத்துடன் தெரிவித்துள்ளார்.

இந்த கப்பலில் தென்கொரியாவில் உள்ள Danwon High School in Ansan என்ற பள்ளி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சுற்றுலா சென்றிருந்தனர் என்றும், அவர்களுக்கு துணையாக சில ஆசிரியர்கள் சென்றிருந்தனர் என்றும், அவர்கள் கதி என்ன என்று இதுவரை தெரியவில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.

இந்த கப்பல் மூழ்குவதை கண்ட மீனவர்கள் நூற்றுக்கணக்கானோர் தங்கள் படகுகளில் கப்பல் இருக்கும் இடத்தை நோக்கி விரைந்து சென்று தண்ணீரில் தத்தளித்து கொண்டிருக்கும் அப்பாவிகளை காப்பாற்றியதாக தகவல்கள் கூறுகின்றன.

மீட்புப்பணிகள் இன்னும் நடந்து கொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

Tags: , ,

Leave a Reply