தமிழ் மாமன்றம் நடாத்திய ‘ரகசியத்தின் நாக்குகள்’ நூல் அறிமுக நிகழ்வு

vau-nool3தமிழ் மாமன்றம் மாதந்தம் நடாத்தும் வாசிப்பும் அனுபவப் பகிர்வும் வரிசையில், ஏப்ரல் மாதத்திற்கான வாசிப்பும் அனுபவப்பகிர்வும் கடந்த 12.04.2014 சனிக்கிழமை வவுனியா இந்திரன்ஸ் விடுதி மண்டபத்தில் மாலை 4.30 மணிக்கு இடம் பெற்றது இம் மாதத்திற்கான வாசிப்பும் பகிர்வில், அறிவாலயம் நிறுவனத்தினரின் ஏற்பாட்டில், புலம்பெயர் கவிஞர் நெற்கொழுதாசன் எழுதிய ‘ரகசியத்தின் நாக்குகள்’ நூல் அறிமுக நிகழ்வு இடம் பெற்றது.
vau-nool1
இந் நிகழ்வில், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், கவிஞர்கள், ஊடகவியலாளர்கள், கலை இலக்கிய ஆர்வலர்கள் என பல தரப்பட்டோரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
vau-nool2
தமிழ் வாழ்த்தினை, தமிழ் மாமன்ற உறுப்பினர், கானாபிரசன்னா அவர்கள் இசைத்தார். தமிழ் வாழ்த்தினை தொடர்ந்து, தலைமையுரையினை, தமிழ் மாமன்றத்தினுடைய தலைவர் இரா. இராஜேஸ்வரன் அவர்கள் நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து, நூல் நயம் இடம் பெற்றது. நூல் நயத்தினை, வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியினுடைய விரிவுரையாளர், நா.பார்த்தீபன் அவர்கள் நிகழ்த்தினார். அந் நூலை வாசிக்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில் அவருடைய நூல் நயம் இடம் பெற்றது. தொடர்ந்து, கவி நயத்தை வைத்திய கலாநிதி. செ.மதுரகன் அவர்கள் நிகழ்த்தினார். அக் கவிதை நூலிலுள்ள பல கவிதைகளை, தனக்கேயுரிய சிறப்பான பாணியில், ரசனையுடன் நயத்தார். அதனைத் தொடர்ந்து, வருகை தந்தவர்கள் சார்பான கருத்துரையினை, கவிஞர். முல்லைதீபன் அவர்கள் வழங்கினார். தொடர்ந்து நன்றியுரையினை தமிழ் மாமன்றத்தினுடைய இணைச்செயலாளர் ச.கஜன் அவர்கள் நிகழ்த்தினார். நிகழ்வை சுவைபட தமிழ் மாமன்றத்தினுடைய இணைச்செயலாளர் கி.நிக்ஷலன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

நெற்கொழுதாசனின், முதலாவது கவிதைத் தொகுதி என்பதைத் தாண்டி, தரமிக்க ஓர் கவிதைத் தொகுதியாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக தரமிக்க படைப்புகள் தொடர்ந்தும் வெளி வர வேண்டும். தரமிக்க ஓர் படைப்பை அறிமுகம் செய்ய கிடைத்தமையிட்டு தமிழ் மாமன்றம் பெருமை கொள்கிறது.

அந் நிகழ்வைத் தொடர்ந்து, தமிழ் மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று, கலந்துரையாடிய ‘விளையாட்;டு அரசியல்’ என்ற தலைப்பிலான பகிர்வு இடம் பெற்றது.

கலை இலக்கிய ரீதியிலான தொடர்ச்சியான இடைவிடாத சேவையை தமிழ் மாமன்றம் ஆற்றிக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
‘தமிழால் வையகத்தலைமை கொள்வோம்’

Tags: , ,

Leave a Reply