2300 சார்ஸ் வைரஸ் கிருமிகள் கொண்ட குப்பிகள் மாயம்! பிரான்ஸ் அதிர்ச்சி தகவல்

virusபிரான்சின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் சேமித்து வைத்திருந்த 2300 சார்ஸ் வைரஸ் கிருமிகள் கொண்ட குப்பிகள் காணாமல் போயுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகளவில் பிரான்ஸ் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் புகழ்பெற்று விளங்குகிறது.

இந்நிலையில் 2300 சார்ஸ் வைரஸ் கிருமிகள் கொண்ட குப்பிகள் காணாமல் போயுள்ளதாக திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஸ்டர் ஆராய்ச்சி நிறுவனத்தின் கோப்புக்காக சேமிக்கப்பட்டு வைத்திருந்த 2300 சார்ஸ் வைரஸ் கிருமிகளைக் கொண்ட 29 குப்பிகள் எங்கள் நிறுவன கிடங்கிலிருந்து காணாமல் போய்விட்டது.

இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு மருந்து மற்றும் சுகாதார பாதுகாப்புத்துறை ஆணையம் கடந்த நான்கு நாட்களாக குப்பிகளை தேடும் பணியை மேற்கொண்டது, எனினும் குப்பிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்று அறிவித்துள்ளது.

காணாமல் போன குப்பிகளில் இருந்த சார்ஸ் வைரஸ் கிருமிகள் காலாவதி ஆனவை என்றும், அந்த கிருமிகளால் பாதிப்பு ஏதும் ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருமிகளை ஆய்வாளர்கள் தவறுதலாக ஆதாரங்களை சமர்பிக்காமலே அழித்திருக்க கூடும் என்ற கண்ணோட்டத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags: , ,

Leave a Reply