நாடு முழுவதும் இடம்பெறும் கொள்ளை, தரகு கொள்ளை ஆகியவற்றின் பின்னணியில் அரசாங்கத்தின் அரசியல்வாதிகள் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார குற்றம் சுமத்தியுள்ளார்.
அவரி் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்தே பொய் சொல்லி வருகிறது. ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு வரும் அரசாங்கம் மேலதிகமாக கொள்ளை மற்றும் தரகு பணத்தை பெற்று வருகிறது. இவைதான் இன்றைய அரசாங்கத்தின் உண்மையாக அடையாளங்கள்.
எங்காவது கொள்ளை அல்லது மோசடி அல்லது தரகு பணம் பெறும் சம்பவங்கள் நடந்தால் அங்கு அரசாங்கத்தின் அரசியல்வாதி ஒருவர் கட்டாயமாக இருப்பார்.
மதுபான பாவனையில் இலங்கை உலக நாடுகளில் இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது.
அரசாங்கத்தின் கொள்ளையடிப்பு மற்றும் தரகு பணம் பெறும் செயற்பாடுகளை கணக்கிட்டால் இலங்கை உலகில் முதலிடத்திற்கு வந்து விடும்.
இந்த விடயங்கள் தொடர்பிலான கின்னஸ் சாதனைகள், அரசாங்கத்தின் தலைவருக்கே கிடைக்கும் எனவும் பாலித ரங்கே பண்டார மேலும் குறிப்பிட்டுள்ளார்.
















