நாளை ‘ஜில்லா’ 100-வது நாள் விழா : விஜய் பாதுகாப்புக்கு 20 பவுன்சர்கள்!

Jilla-vijayமோகன்லால், விஜய் இணைந்து நடித்த ‘ஜில்லா’ படத்தின் 100-வது நாள் விழா நாளை மறுநாள் 18-ஆம் தேதி வெள்ளிக்கிழமை சென்னையிலுள்ள ஆல்பட் தியேட்டரில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் படத்தின் ஹீரோக்கள் மோகன்லால், விஜய் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

‘துப்பாக்கி’ படத்தின் வெற்றியைத் தொடந்து இந்த வருடம் பொங்கலுக்கு விஜய்யின் ‘ஜில்லா’ படம் ரிலீசானது. சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்பி செளத்ரி தயாரிப்பில், ஆர் டி நேசன் செய்த இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

படம் ரிலீசான முதல் வாரத்தில் வசூல் பிரமாதமாக இருந்தாலும், படம் குறித்தான ”நல்லா இருக்கு… நல்லா இல்லே…”ங்கிற மாதிரியான கலவையான விமர்சனங்கள் படத்துக்கான ரசிகர்கள் கூட்டத்தைக் குறைத்து விட்டது. இருந்தாலும் தம் கூட்ட படத்தை ஓட்டி வந்தனர். சென்னையிலுள்ள பி.வி.ஆர், பேபி ஆல்பட் ஆகிய இரண்டு தியேட்டர்களிலும் 75 நாட்களைத் தாண்டி படம் ஓடுவதாக போஸ்டர்களும், பத்திரிகை விளம்பரமும் செய்யப்பட்டது.

ஆனால் அப்போது பி.வி.ஆர் தியேட்டரின் ஆன்லைன் புக்கிங்கில் ஜில்லா படத்தை தேடியபோது அந்த தியேட்டரில் ஓடவே இல்லை என்ற உண்மை தெரிந்தது. பின்னர் ஆல்பட் தியேட்டரில் இருக்கும் இன்னொரு சிறிய தியேட்டரான பேபி ஆல்பட்டில் மட்டும் ஒரு காட்சியாக ஜில்லா படம் 100 நாள் வரை ஓட்டப்பட்டது. அதைக் கொண்டாடத்தான் இப்போது ஆல்பட் தியேட்டரில் ஒரு பெரிய விழா ஒன்றை நாளை மறுநாள் எடுக்கின்றனர்.

இந்த விழாவில் ஹீரோ விஜய்யும் கலந்து கொள்ள இருப்பதால் ரசிகர்களிடமிருந்து அவரை பாதுகாக்க 20 பவுன்சர்களும் களமிறங்கி அவரை பாதுகாக்க உள்ளனர். எங்க போனாலும் இந்த பவுன்சர்ஸ் கல்ச்சரை மட்டும் விடவே மாட்டேங்கிறாங்களே…?

Tags: , ,

Leave a Reply