“கோச்சடையான் படம், மே 9 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் விளம்பரங்களில் ;ரஜினி நடித்த…என்ற வாசகம் இடம்பெற்றிருக்கிறது. உண்மை என்ன தெரியுமா? கோச்சடையான் படத்தில் ஒரேயொரு காட்சியில் மட்டுமே ரஜினி நடித்தாராம். படத்தில் 99 சதவிகித காட்சிகளில் நடித்தது ரஜினி அல்ல, அவரைப்போலவே மேனரிஸம் செய்யக் கூடிய டூப் நடிகர்களை வைத்தே மொத்தப் படத்தையும் எடுத்திருக்கிறார்கள்.
அவதார் படத்தில் பயன்படுத்தப்பட்ட நடிப்பு பதிவாக்கம் என்கிற மோஷன் கேப்சரிங் டெக்னாலஜி தொழில்நுட்பத்தில் இப்படம் தயாராகி வருகிறது. இந்த தொழில்நுட்பத்தின்படி…ரஜினியைப்போன்று கிராபிக்ஸ் உருவத்தை உருவாக்க ரஜினி தேவையில்லை.
யாராவது ஒரு ஆள் நடித்தால் போதுமானது. அந்த ஆளின் அசைவுகளின்மீது கிராபிக்ஸ் உருவத்தை பொருத்திவிடுவார்கள். ரஜினியைப் பொருத்தவரை அவரது மேனரிஸம், பாடிலாங்வேஜ் தனித்துவமானது. எனவே அவரை ஒரேயொரு காட்சியில் நடிக்க வைத்துவிட்டு, அவரைப்போலவே மிமிக்ரி செய்பவர்களை வைத்து மீதி காட்சிகளை படமாக்கி உள்ளார் சௌந்தர்யா.
உடல்நிலை சரியில்லாமல் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுத்திரும்பிய பிறகு ரஜினியினால் டான்ஸ் ஆடுவது, ஃபைட் பண்ணுவது போன்ற கடினமான பணிகளை செய்ய முடியாது என்பதால் இந்த ஏற்பாட்டினை செய்திருக்கிறார். விஜய் டிவி ஜோடி நிகழ்ச்சியில் நடனம் ஆடிவரும் யுவராஜ் என்ற டான்ஸரும், மற்றொரு சிரிப்பு நடிகரும்தான் ரஜினிக்கு டூப் போட்டு நடித்துள்ளனர். குறிப்பாக ரஜினி ஆடுவதுபோல் உருவாக்கப்பட்டுள்ள ருத்ரதாண்டவத்தை ஆடியது ரஜினி அல்ல, யுவராஜ்தான். இந்த விஷயத்தை ஜோடி நிகழ்ச்சியின்போது யுவராஜே தெரிவித்தார். இவர் மிகச்சிறந்த டான்ஸர். இதில் இன்னொரு முக்கியமான விஷயமும் உண்டு…கோச்சடையான் படத்தின் நாயகியான தீபிகாபடுகோன் உடனான காம்பினேஷன் ஷாட்டில் கூட ரஜினி நடிக்கவில்லையாம். டூப்தான் நடித்துள்ளனர். அதனால் வெறுத்துப்போன தீபிகா படுகோன் கடுப்புடனேதான் நடித்துக் கொடுத்திருக்கிறார்.
















