பைக் திருடிய இளைஞர்களை கட்டி வைத்து விஷ எறும்புகளால் கடிக்க வைத்த கிராமத்தினர். பெரும் பரபரப்பு.

antஅமேசான் காட்டுப்பகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் இரண்டு பைக் திருடர்களை பிடித்த கிராம மக்கள் ஈவு இரக்கமின்றி கட்டிப்போட்டு விஷ எறும்புகளை கடிக்க வைத்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த இரண்டு இளைஞர்களும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அமேசான் காடு அருகே உள்ள Ayopaya, western Bolivia. என்ற சிறிய கிராமத்தில் இரண்டு இளைஞர்களை பைக் திருடியதாக பிடித்த கிராம மக்கள், அந்த இளைஞர்களை ஒரு மரத்தில் கட்டி வைத்து, அதன் பின்னர் pseudomyrmex triplarinus என்ற விஞ்ஞானப்பெயரால் அழைக்கப்படும் விஷ எறும்புகளை அவர் மீது விட்டு கடிக்க வைத்தனர். விஷ எறும்புகளால் கடிக்கப்பட்ட அந்த இளைஞர்கள் கதறி அழுதுள்ளனர்.

அதன் பின்னர் அந்த இளைஞர்களின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அவர்களை நேரடியாக வரவழைத்து £2,200 பணத்தை அபராதமாக பெற்றுவிட்டு இரண்டு இளைஞர்களையும் கிராமத்தினர் விடுவித்துள்ளனர்.

தற்போது Bolivia’s Cochabamba hospital என்ற மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் இரண்டு இளைஞர்களும் அபாய கட்டத்தை தாண்டவில்லை என அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் Dr Roberto Paz, அவர்கள் தெரிவித்தார். ஒரு இளைஞனுக்கு சிறுநீரகம் முற்றிலும் செயலிழந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags: , ,

Leave a Reply