தெற்கு விமான நிலையம் துறைமுகம் பார்க்கச் சென்ற ஐதேகவினர்மீது காவற்துறையினர் பார்த்திருக்க தாக்குதல்

unp2மத்தல விமான நிலையம் மற்றும் மாகம்புர துறைமுகத்தை பார்வையிடச் சென்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி.பெரேரா, எரான் விக்ரமரட்ன மற்றும் ஆர். யோகராஜன் உள்ளிட்ட பிரதிநிதிகள் இன்று மத்தல விமான நிலையம் மற்றும் மாகம்புர துறைமுகத்தை பார்வையிடச் சென்றனர்.

அதன்போது தமது வாகனங்களை நோக்கி கல் வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றதாகவும் பிரதேச அரசியல்வாதி ஒருவர் துப்பாக்கியுடன் வந்து அச்சுறுத்தியதாகவும் ஆர்.யோகராஜன் தெரிவித்தார்.

‘மத்தல விமான நிலையத்திற்கு சென்று வெளியில் வந்தபோது அங்கு கூடியிருந்த 150 பேர்வரை எங்களை அச்சுறுத்தினர். ´எங்கள் பிரதேச அபிவிருத்தியை தடுக்க நீங்கள் முயற்சிக்க வேண்டாம். இதற்கு எதிராக கருத்து வெளியிட வேண்டாம்´ என கூறினர். நாம் நிலைமையை பார்வையிடவே வந்தோம் என கூறியபோது அவர்கள் ஊ சத்தமிட்டு எங்களை திட்டினர். நாங்கள் சென்ற பஸ்ஸை நோக்கி கல் வீசினர்.

இதனையடுத்து ஹம்பாந்தோட்டை டிஐஜியை (பிரதி பொலிஸ் மா அதிபர்) தொலைபேசியில் தொடர்பு கொண்டு அச்சுறுத்தல் குறித்து தெரிவித்தோம். துறைமுகத்திற்கு செல்லவுள்ளோம். அங்கும் என்ன நடக்கும் என்று தெரியவில்லை என அவரிடம் தெரிவித்தோம்.

பின் துறைமுகத்திற்குச் சென்றபோது அங்கு கூடியிருந்த 50 பேர் வரை எமக்கு அச்சுறுத்தல் விடுத்து தாக்குதல் நடத்த வந்தனர். இந்த குழுவிற்கு ஹம்பாந்தோட்டை நகர சபைத் தலைவர் எராஜ் காவிந்த பெனாண்டோ த

லைமை வகித்தார். அவரின் கையில் துப்பாக்கி இருந்தது.
இவர்கள் மிகவும் மோசமான முறையில் நடந்து கொண்டனர். ஹம்பாந்தோட்டை ஏ.எஸ்.பி மற்றும் எச்யுஐ (பொலிஸ் அதிகாரிகள்) ஆகியோர் பார்த்துக் கொண்டிருக்கையில் இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்தனர். தாக்குதலில் எம்மோடு வந்திருந்த ஊடகவியலாளர்களின் கமராக்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது’ என பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.யோகராஜன் தெரிவித்தார்.

Tags: , ,

Leave a Reply