பா.ஜ.க. பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியை ஆதரித்து அமெரிக்க வாழ் இந்தியர்கள் 650 பேர், குஜராத் உட்பட பல்வேறு மாநிலங்களில் பிரசாரத்தில் ஈடுட்டுள்ளனர்.
‘ இந்திய வளர்ச்சிக்கான உலக இந்தியர்கள்” என்ற அமைப்பின் தலைவராக இருப்பவர் பரத் பராய். இவர், அமெரிக்காவின் சிக்காகோ நகரில் வைத்தியராக பணியாற்றி வருகிறார். அவரது தலைமையில் 650 பேர், குஜராத் வந்துள்ளனர். இக்குழுவினர்தான், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஒபாமாவுக்காக நிதி திரட்டியவர்கள்.
இதுகுறித்து, ஆமதாபாத்தில் பரத் பராய் அளித்த பேட்டியொன்றில்,
‘அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது, ஒபாமாவுக்கு ஆதரவாக நிதி சேகரித்தேன். தற்போது, இந்தியாவில் மோடி பிரதமராவதற்கு ஆதரவு தெரிவித்து பிரசாரத்தில் ஈடுபட வந்துள்ளேன்.
அமெரிக்க வாழ் இந்தியர்கள் பலரும் மோடி பிரதமராவதை விரும்புகின்றனர். அவர், நாட்டிற்கு ஊக்கமளிக்கும் தலைவராக மட்டுமின்றி, நாட்டின் வளர்ச்சியிலும் கவனம் செலுத்திவருகிறார்.
ஒபாமாவுடன் மோடியை ஒப்பிடும்போது, இருவரின் அணுகுமுறையும் ஒரே மாதிரித்தான் உள்ளது. நாடுதான் முக்கியம் என்பது அவர்களின் பொதுவான அணுகுமுறையாகும்” என்றார்
















