நடிகர்களுக்கு மட்டும் முக்கியத்துவமா? மோடி மீது ராமதாஸ், வைகோ அதிருப்தி. பாஜக கூட்டணியில் சலசலப்பு.

modi-vaikoபாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் தமிழக சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று மோடி ஈரோட்டில் நடந்த பிரமாண்டமான கூட்டத்தில் பேசினார். மோடியின் கூட்டத்தை வைகோ மற்றும் ராமதாஸ் ஆகியோர் திடீரென புறக்கணித்தது பாஜக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று தமிழகம் வந்த நரேந்திர மோடி கிருஷ்ணகிரி, சேலம், கோவை ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்தார். நேற்று மோடி கிருஷ்ணகிரியில் பிரச்சாரம் செய்யும்போது பாமக நிறுவனர் ராம்தாஸ் கிருஷ்ணகிரியில்தான் இருந்தார். ஆனால் மோடியில் கூட்டத்தில் பங்கேற்பதை தவிர்க்க அவர் திடீரென திருவண்ணாமலை சென்றுவிட்டார்.

ரஜினிகாந்த், விஜய் போன்ற நடிகர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கூட்டணி கட்சி தலைவர்களுக்கு மோடி கொடுக்கவில்லை என அவர் மீது ராமதாஸ் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதே போன்று நேற்று மோடி ஈரோட்டில் பிரச்சாரம் செய்யும்போது ஈரோட்டில் இருந்த வைகோ, திடீரென விருதுநகருக்கு சென்றுவிட்டார். விருதுநகர், மதுரை ஆகிய ஏதாவது ஒரு இடத்திற்கு மோடி பிரச்சாரம் செய்ய வேண்டும் என வைகோ கேட்டுக்கொண்டதாகவும், அதற்கு மோடி சம்மதிக்காததால், வைகோவுக்கு மோடி மீது அதிருப்தி ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Tags: , ,

Leave a Reply