காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளருக்கு அமேதி தொகுதியில் ஆதரவு பெருகிக்கொண்டே போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கருத்துக்கணிப்புகளிலும் ராகுல் காந்தியை ஆம் ஆத்மி வேட்பாளர் குமார் விஷ்வாஸ் முந்துகிறார் என்று சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்பு கூறியுள்ளது.
இதனால் பிரியங்கா காந்தி அமேதி தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு, சரிந்த ராகுல் காந்தியின் செல்வாக்கை நிமிர்த்த தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் ராகுல் காந்தியை தான் தேர்தலில் தோற்கடித்துவிடுவோம் என்பதை தெளிவாக புரிந்து கொண்ட பிரியங்கா காந்தி, தன்னை கொலை செய்ய திட்டமிட்டு இருப்பதாக ஆம் ஆத்மி வேட்பாளர் குமார் விஸ்வாஷ் அதிரடி குற்றச்சாட்டு ஒன்றை இன்று தெரிவித்துள்ளர்.
பிரியங்கா காந்தியிடம் ஒரு மர்ம மனிதர், தான் ராகுல் காந்தியை எதிர்க்கும் வேட்பாளரை சுட்டுக்கொல்வதாக கூறியதாகவும், அதற்கு ப்ரியங்கா காந்தி அந்த நபரிடம் “தன்னை கெஸ்ட் ஹவுசில் வந்து சந்திக்கும்படி கூறியதாகவும் உள்ள வீடியோ ஆதாரத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் அமேதி தொகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
















