சந்தானத்தை ஃப்ரெண்டு கேரக்டரில் நடிக்க வைத்த்து தமிழ்சினிமாவில் தனது ஹீரோ வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின். அவர் நடித்த ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படம் அவருக்காக ஓடியது என்பதை விட சந்தானத்தின் காமெடிக்காகத்தான் அந்தப்படம் நூறு நாட்கள் ஓடியது.
அதனால், தான் ஹீரோவாக நடிக்கும் அடுத்தடுத்த படங்களில் காமெடிக்காக சந்தானத்தை பயன்படுத்தி வந்தார் உதயநிதி. இந்நிலையில் சந்தானம் இனி ஹீரோவாக மட்டுமே நடிக்க முடிவெடுத்திருப்பதாக சில தினங்களுக்கு முன்பு நாம் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தோம்.
அது இப்போது உண்மையாகியிருக்கிறது. ஏ.ஜெகதீஸ் டைரக்ட் செய்யும் ‘நண்பேண்டா’ படத்தில் நடித்து வரும் உதயநிதி அடுத்தடுத்து இரண்டு படங்களில் ஹீரோவாக நடிக்கப் போகிறார். அதில் ஒரு படத்தை ‘என்றென்றும் புன்னகை’ படத்தை டைரக்ட் செய்த அஹமத் டைரக்ட் செய்கிறார்.
இந்தப் படத்தில் உதயநிதிக்கு ஃப்ரெண்ட்டாக சந்தானத்தை நடிக்கக் கேட்டுப்பார்த்தார்களாம். ஆனால் ”சாரி ஜி இனிமே நானும் ஹீரோவா மட்டும் தான் நடிக்கப் போறேன். அதனால உங்க படத்துல என்னால நடிக்க முடியாது” என்று சொல்லி நடிக்க மறுத்து விட்டாராம்.
இதனால் அதே காமெடி கேரக்டரில் சூரியைப் போட யோசித்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.
















