வவுனியாவில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் ஒருவர் கைது: வர்த்தக நிலையமும் சீல் வைப்பு

arrestவவுனியாயில் பயங்கரவாத புலனாய்வுத் துறையினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வர்த்தக நிலையம் ஒன்றும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை (16) இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர் விசாரணைக்காக வவுனியா பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

நெடுங்கேணியில் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் தேவிகன் அவர்களுடன் தொடர்புகளைப் பேணியதாக வவுனியா பஸ் நிலைய மேல்மாடியில் இயங்கிய டாட்டா ஸ்போட்ஸ் என்ற விளையாட்டு உபகரண விற்பனை நிலையமே இவ்வாநு சீல் வைக்கப்பட்டுள்ளதுடன் கடையில் வேலை செய்த இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வர்த்தக நிலைய உரிமையாளர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளதாகவும் அங்கு வேலை செய்த வவுனியா பண்டாரிக்குளத்தைச் சேர்ந்த தில்லையன் தீபாகரன் (வயது 22) விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கடை முன்பகுதியில் பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

Tags: , ,

Leave a Reply