“தமிழ்ப்பட நடிகர்களில் விளம்பர வெறி பிடித்து அலைபவராக இருக்கிறார் நடிகர் விஜய். மற்ற ஹீரோக்களுக்கும் விளம்பர மோகம் உண்டுதான். ஆனால் விஜய் அளவுக்கு விளம்பர வெறி பிடித்தவர்கள் யாருமே கிடையாது.
ஆரம்பகாலங்களில் ஷகீலா டைப்பான படங்களில் நடித்துக் கொண்டு, சராசரி நடிகர்களில் ஒருவராக, தான் உண்டு, தன் வேலை உண்டு என்று சமர்த்தாகத்தான் இருந்தார் விஜய். மகனின் மார்க்கெட் சூடுபிடிக்கவும், அவரது அப்பா எஸ்.ஏ.சி., மண்டையைக் கழுவிய பிறகு ஆளே மாறிப்போய்விட்டார் விஜய். அரசியலுக்கு வர வேண்டும், ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற பேராசைகளும் விஜய்யை பிடித்து ஆட்ட ஆரம்பித்துவிட்டன. அதன் பிறகு விஜய்யின் போக்கில் அநியாயத்துக்கு மாற்றம்.
அரசியல் பிரச்சனைகளில் எல்லாம் மூக்கை நுழைக்க ஆரம்பித்தார். கடைசியாய் மோடியை சந்திக்கும் அளவுக்குப் போயிருக்கிறார். இத்தனைக்கும் அடிப்படை காரணம்…விஜய்யின் விளம்பர வெறி தவிர காரணம் வேறில்லை. அந்த வெறிதான் ஓடாத படத்துக்கு 100வது நாள் வெற்றி விழா கொண்டாடுமளவுக்கு விஜய்யை கொண்டுபோயிருக்கிறது. சச்சின் உட்பட பல தோல்விப்படங்களுக்கு ஏற்கனவே வெற்றிவிழா கொண்டாடி மகிழ்ந்தவர்தான் விஜய். அதே பாணியில்தான் இப்போது ஜில்லா படத்துக்கும் வெற்றிவிழா கொண்டாட்டம் நடக்கிறது – விஜய்யின் ஏற்பாட்டில். பொங்கலுக்கு வெளியான படங்களில் அஜித் நடித்த வீரம் படம் மட்டுமே மக்களால் வரவேற்கப்பட்ட படம்.
ஜில்லா படமோ வெளியான சில நாட்களிலேயே பல தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்டது. இப்படிப்பட்ட படத்துக்குத்தான் இன்று 100வது நாள் கொண்டாடுகிறார்கள். ஜில்லா படத்தின் 100வது நாள் விளம்பரங்களில் மூன்று தியேட்டர்களின் பெயர்கள் உள்ளன. சென்னையில் உள்ள ஆல்பர்ட், பி.வி.ஆர். மற்றும் பொன்னேரியில் உள்ள வெற்றிவேல் முருகன். எத்தனை காட்சிகள் என்ற விவரமும் இல்லை.
இதை வைத்தே ஜில்லா படம் ஓடிய லட்சணத்தைப் புரிந்து கொள்ளலாம்.
















