டோர் டெலிவரி செய்யப்படும் காங்கிரீட் வீடுகள். இங்கிலாந்தின் வினோத நிறுவனம்.

england-houseரெடிமேட் உடைகள் கேள்விப்பட்டுள்ளோம்,. ரெடிமேட் வீடுகளை கேள்விப்பட்டதுண்டா? இங்கிலாந்து நிறுவனம் ஒன்று ரெடிமேட் வீடுகளை தயார் செய்து டோர் டெலிவரியும் செய்கிறது.

25 டன் எடையுடன் மூன்று பெட்ரூம், கிச்சன் உள்படசகல வசதிகளும் உள்ள வீடுகளை தயார் செய்து டிரக்கில் கொண்டு வந்து நாம் விரும்பும் இடத்தில் கொண்டு வந்து டோர் டெலிவரி செய்கிறது இந்த நிறுவனம். இங்கிலாந்து ராணுவத்தில் பணிபுரிந்த முன்னாள் ராணுவத்தினர் ஒன்றுசேர்ந்து இந்த நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.

ஆர்டர் கொடுத்த மூன்றே வாரங்களில் நமக்கு தேவையான இடத்தில் அவர்களே வீட்டை கொண்டு வந்து நிறுத்திவிட்டு சென்றுவிடுவர். அதுமட்டுமின்றி ஒரு வருடத்திற்கு அந்த வீட்டிற்கு கேரண்டியும் கொடுக்கின்றனர்.

Tags: , , ,

Leave a Reply