முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் மற்றும் முன்னாள் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் ஆகியோரின் புதல்வியான செல்ஸி கிளின்டன் கர்ப்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது செல்ஸிக்கும் (34 வயது) அவரது கணவன் மார்க் மெஸ்வின்ஸ்கிக்கும் முதலாவது குழந்தையாகும்.
தற்போது செல்ஸி உலக சுகாதார செயற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தும் தொண்டு ஸ்தாபனமான கிளின்டன் மன்றத்தின் உப தலைவராக பணியாற்றி வருகிறார்.
தான் கர்ப்பமடைந்துள்ளமை குறித்து செல்ஸி குறிப்பிடுகையில்,
“எமது முதலாவது குழந்தை பிறக்கப் போவதை நினைக்க எனக்கும் மார்கிற்கும் பெரிதும் பரவசமாக உள்ளது. எனது தாய் எனக்கு எவ்வாறு இருந்தாரோ அவ்வாறு நான் எனது குழந்தைக்கு சிறந்த தாயாக இருப்பேன் என நம்புகிறேன்” என்று கூறினார்.
















