விடுதலை புலிகள் உள்ளிட்ட 16 அமைப்புக்கள் மீதான தடை குறித்து விளக்கம்

srilanka-logoதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருப்பதாகக் கூறப்படும் 16 அமைப்புக்கள் மீதான தடை குறித்து கொழும்பிலுள்ள வெளிநாட்டு உயர் அதிகாரிகளுக்கு விளக்கமளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சு மற்றும் பாதுகாப்பு நகர அபிவிருத்தி அமைச்சு ஆகியன இணைந்து இந்த செயற்றிட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.

இதன்படி வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் எதிர்வரும் வியாழக்கிழமை நாட்டிலுள்ள வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை சந்திக்கவுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உள்ளிட்ட 16 அமைப்புக்கள் இம்மாதம் இலங்கை அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டுள்ளன.

Tags: , ,

Leave a Reply