விழுப்புரம் நாடாளுமன்ற அ.தி.மு.க வேட்பாளரை ஆதரித்து திருச்சிற்றம் பலம் கூட்டு ரோட்டில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசியதாவது:–
தேர்தல் அறிக்கையில் கச்ச தீவை மீட்க தீவிரமாக போராடுவோம் என்கிறார் கலைஞர். அப்படியானால் கச்ச தீவை மீட்க இதுவரை தீவிரமாக போராடியது இல்லையா, முதல்வர் பதவியில் இருந்த கலைஞர் இதற்கு போராடியது இல்லை என்றால் ஏன் முதல்வர் பதவி வேண்டும், தேர்தலில் ஏன் வாக்கு கேட்டு வருகிறீர்கள்?
இனப்படுகொலையின் போது உண்ணாவிரதம் என்று போராட்ட நாடகத்தை நடத்தி அங்கு பல லட்சம் மக்களை கொன்று குவித்த மத்திய அரசுக்கு கைகோர்த்து இருந்தாரே கலைஞர் அவருக்கு தமிழக மக்கள் ஒட்டு போடுவார்களா? நிச்சயம் அவருக்கு ஓட்டுபோடமாட்டார்கள். இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை, ராஜபக்சே போர் குற்றவாளி என்று தமிழக சட்டசபையில் தீர்மாணம் கொண்டுவந்தவர் ஜெயலலிதா. அதை மத்திய அரசு ஏற்கவில்லை.
இந்தியாவில் புத்தர் சிலையினை திறந்து வைக்க பாஜக வின் மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் வரவழைக்கப்பட்டவர் ராஜபச்சே, அந்த பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளாரே வைகோ, இது துரோகமில்லையா? இலங்கையின் நம் இனத்தில் வழிபாட்டு தலங்களை இடித்துவிட்டு இந்தியாவிற்கு வந்து ஆந்திராவில் சாமி தரிசனம் செய்கிறாரே ராஜபச்சே, அவரை ஆதரித்த காங்கிரஸ் கட்சி தமிழகத்திலிருந்து விரட்டபடவேண்டும்.
விஜயகாந்த் தமிழனத்திற்காக போராட்டகள் நடத்தியது உண்டா, போராட்டம் நடத்தினால் காங்கிரஸ் கட்சியுடனும் பாஜக வுடன் கூட்டனி வைக்க முடியாது அரசியல் லாபம் கிடைக்காது.
இலங்கையில் தமிழனம் காக்கப்படவேண்டும், கச்சதீவை மீட்கபடவேண்டும், இலங்கை அரசால் தமிழக மீணவர் தாக்கப்படுவதை தடுக்கபடவேண்டும் என்றால் தமிழக முதல்வர் பிரதமர் பதவிக்கு வரவேண்டும்.
தமிழன மக்கள் மீது அக்கரை இல்லாத தி.மு.க. காங்கிரஸ், பா.ஜ.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை தமிழகத்தைவிட்டு விரட்டவேண்டும். இவ்வாறு சீமான் பேசினார்.
















