உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல் ஆகிய இரண்டு படங்களிலும் அவருடன் இணைந்து நடித்தார் சந்தானம்.
இந்த இவ்விரு படங்களிலும் தனக்கு நிகரான வேடத்தை சந்தானத்துக்குக் கொடுத்து மட்டுமல்ல, அவரது காமெடியை நம்பியே கதாநாயகனாக நடித்தார் உதயநிதி.
இது கதிர்வேலன் காதல் படத்தைத் தொடர்ந்து தற்போது நண்பேன்டா என்ற படத்தில் நடிக்கிறார் உதயநிதி.
இந்தப் படத்திலும் சந்தானத்துக்கு பிரதான வேடத்தைக் கொடுத்திருக்கிறார் உதயநிதி.
நண்பேன்டா என்ற டைட்டில் குறிப்பதே சந்தானத்தைதான். அந்தளவுக்கு தன் அனைத்து படங்களிலும் சந்தானத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் உதயநிதி.
ஜீவாவை வைத்து என்றென்றும் புன்னகை படத்தை இயக்கிய இயக்குநர் அஹமது அடுத்து உதயநிதியை ஹீரோவாக வைத்து ஒரு படம் இயக்குகிறார். இந்தப் படத்தில் நடிக்க சந்தானத்தை அணுகினார் இயக்குநர் அஹமது.
”ஸாரி..பாஸ் நான் இனிமே ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன். இனிமேல் ஹீரோவுக்கு ப்ரண்ட் கேரக்டர்களில் நடிப்பதில்லை என்று முடிவு செய்துவிட்டேன்.” என்று அவரை திருப்பி அனுப்பி விட்டாராம் சந்தானம்.
இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட உதயநிதி அப்ஸெட்.
மனதை தேற்றிக் கொண்டு சந்தானம் நடிக்க வேண்டிய வேடத்தில் சூரியை கமிட் பண்ண இருக்கிறார்கள்.
















