தமிழக மீனவர்களுக்காக காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி முதலைக் கண்ணீர் வடிப்பதாக தமிழக மாநில முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தேர்தல் காலத்தில் தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுப்பதனைப் போன்று சோனியா நடித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
உண்மையில் சோனியா காந்தி, தமிழக மீனவர்களுக்கு எதிராகவும், இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாகவுமே செயற்பட்டுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மீனவர் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து மத்திய அரசாங்கம் எவ்வித கரிசனையும் கொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
















