உள்நாட்டு ரீதியான தீர்வுத் திட்டத்தை எட்ட வாய்ப்பளிக்க வேண்டும் – அமெரிக்க செனட்டர்கள்

usa-flag2இலங்கையில் உள்நாட்டு ரீதியான தீர்வுத் திட்டமொன்றை எட்டுவதற்கு வாய்ப்பளிக்க வேண்டுமென சில அமெரிக்க செனட்டர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்காவும் சர்வதேச சமூகமும் காத்திரமான ஆதரவினை வழங்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளனர்.

யுத்தம் இடம்பெற்ற கால சம்பவங்கள் தொடர்பிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் போது நாட்டின் இறைமைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளனர்.சுயாதீன விசாரணைகளுக்கு ஆதரவளிக்குமாறு முன்னதாக 11 செனட்டர்கள் கோரியிருந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை 17 ஆக உயர்வடைந்துள்ளது. யுத்தத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள மாற்றங்களை வரவேற்கப்பட வேண்டியது என செனட்டர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜோன் கொரயன், ஒரின் ஹாட்டிச், ஜோன் பாராசோ, ரோய் புலுரட், ஜோன் மான்சின், ஜெப் செசியன்ஸ், ஜோன் பூஸ்மான், மைக் க்ராபோ, சூசன் கொலின்ஸ், மைக் என்ஸீ, பெட் ரொபர்ட்ஸ், ரிம் ஸ்கொட், டான் கோட்ஸ், ரொஜர் விக்கர், ஜிம் இன்ஹோப்பீ ஆகியோர் இவ்வாறு உள்நாட்டுப் பொறிமுறைமைக்கு ஆதரவளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Tags: ,

Leave a Reply