மீடியாக்களுக்கு பயந்து முதல் ஆளாக வாக்களித்த ரஜினி

rajini-voteசினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் அரசியலில் ரஜினி இன்னும் கூட காமெடியன்தான்.

குறிப்பாக வாக்குப்பதிவு அன்று கண்டிப்பாக காமெடியனாகிவிடுவார்.

வாக்களிப்பது என்பது ரகசியமாக நிறைவேற்ற கடமை என்பது தெரியாமல், ஒருமுறை வாக்களித்துவிட்டு வெளியே வந்த ரஜினி பா.ஜ.க.வுக்கு வாக்களித்ததை வெளிப்படையாகத் தெரிவித்தார்.

கடந்த தேர்தலின்போது, தொலைக்காட்சி காமிராக்கள் தன்னைச்சுற்றி நிற்பது தெரிந்தே இரட்டை இலைக்கு பகிரங்கமாக வாக்களித்து தி.மு.க.வினரின் வசவுகளை வாங்கிக்கட்டிக்கொண்டார்.

இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடந்து மறுபடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதாலோ என்னவோ, மீடியாக்கள் வருவதற்கு முன்னதாகவே இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கிய உடனே, அதாவது, காலை 7 மணிக்கு சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு வந்தார் ரஜினி.

வாக்குப்பதிவு துவங்கியவுடன் முதல் ஆளாக அவர் வாக்களித்தார்.

Tags: , ,

Leave a Reply