வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் போதிய விளக்கங்கள் அளிக்கப்படவில்லை – சுமந்திரன்

sumanthiran1வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் போதியளவு விளக்கங்கள் அளிக்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.தந்திரோபாய அபிவிருத்தி சட்டத்தின் கீழ் எவ்வாறான வசதிகள் மற்றும் சலுகைகள் வழங்கப்படும் என்பது தொடர்பில் தெளிவுபடுத்தப்படவில்லை.இதன் காரணமாகவே மாநாயக்க தேரர்கள் கூட இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

மதுபானம், சூதாட்டம் தவறானது என சகல மதங்களிலும் சொல்லப்பட்டுள்ளது. குறித்த மூன்று வர்த்தமானி அறிவித்தல்கள் தொடர்பில் அரசாங்கத்தின் தெளிவுபடுத்தல் போதுமான அளவில் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.தந்திரோபாய அபிவிருத்தி தொடர்பான விவாதத்தின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Tags: , ,

Leave a Reply