அமலா பால் உடனான காதலை மூடி மறைக்க நினைக்கவில்லை… – இயக்குநர் விஜய் கடிதம்

vijay-amala-paulஇயக்குநர் விஜய் – நடிகை அமலா பால் காதல் விவகாரம்தான் கடந்த சில நாட்களாக டாக் ஆப் த டவுன்.

தமிழ்த் திரையுலகிலும்,ஊடகங்களிலும் இவ்விஷயம் பரபரப்பாக பேசப்பட்டு வந்ததை அடுத்து, எங்களது காதலைப் பற்றியும், எதிர்காலத்தைப் பற்றியும் விரைவில் அறிவிக்கிறோம் என்றார் அமலா பால்.

அதன் பிறகு கடந்த வாரம் இருவரும் ஜோடியாக ஊடகங்களை சந்திப்பதாகத் தகவல் வந்தது. ஆனால், இருவருமே சந்திக்கவில்லை.

இந்நிலையில், தற்போது இயக்குநர் விஜய் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார்.

என்ன இருக்கிறது அந்த கடித்தத்தில்?

இதோ உங்கள் பார்வைக்கு….

“ஒருவராக இருந்து இருவராக மாற உள்ள எனது நிலையைப் பற்றி சொல்வதற்கு இதை ஒரு சிறந்த சந்தர்ப்பமாகக் கருதுகிறேன். எனது வாழ்க்கைத் துணையைத் தேடியது முடிவடைந்து, எனது மனம் கவர்ந்த காதலை அமலாவிடம் கண்டேன்.

அவர் ஒரு நல்ல மனம் கொண்டவர் என்பது எனக்குத் தெரியும்.

அவர் உண்மையாகவே ஒரு பொக்கிஷம்.

அதை கண்ணும் கருத்துமாக காதலுடன் பாதுகாப்பேன்.

எங்களது திருமண திட்டத்தை கண்ணியமாகவும், முறையாகவும் நாங்களே அறிவிக்க வேண்டும் என்று இருந்தோம்.

ஆனால், எங்களுக்குத் தெரியாமலே அந்த செய்தி வெளியில் வந்து விட்டது.

மீடியாக்களிடமிமும், நண்பர்களிடமும், எங்களுக்கு வேண்டப்பட்டவர்களிடமும் எங்களது திருமண திட்டத்தைப் பற்றி நாங்கள் மூடி மறைக்க வேண்டும் என்று நினைத்ததேயில்லை.

மீடியாக்களையும், நண்பர்களையும் தனிப்பட்ட அழைப்புடன் எங்களது மரியாதையை வெளிப்படுத்தும் விதத்தில் சந்திப்போம்.

அமலா பால் சில பொறுப்புக்களை முடிக்க வேண்டும்.

நானும் எனது மனதுக்கு நெருக்கமான ‘சைவம்’ படத்தின் வெளியீட்டை விரைவில் எதிர்நோக்கியுள்ளேன்.

அதன் பின்தான் எங்களது வாழ்க்கையின் மிக முக்கியமான கொண்டாட்டத்திற்கு நேரம் ஒதுக்க முடியும்.

அதுவரை என்றென்றும் உங்களது வாழ்த்துகளையும், ஆசீர்வாதங்களையும், ஆதரவையும் வேண்டுகிறோம்.”

– என்று அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார் விஜய்.

இந்த கடிதத்துடன் அமலா பால் உடன் நெருக்கமாக இருக்கும் இரண்டு புகைப்படங்களையும் அனுப்பி வைத்திருக்கிறார் இயக்குநர் விஜய்.

அதில் ஒன்றுதான் மேலே உள்ள படம்..

Tags: , , , ,

Leave a Reply