பிரதமர் மன்மோகன் சிங்கின் தம்பி பாஜக கட்சியில் இணைந்துள்ளதால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
பஞ்சாப் மாநில தலைநகர் அமிர்தசரசில் நேற்று பா.ஜ.க. தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி முன்னிலையில் பிரதமர் மன்மோகன் சிங்கின் சகோதரர் தல்ஜித் சிங் கோலி பா.ஜ.க.வில் இணைந்தார்.
நேற்று முன்தினம் காலை பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த பிரதமர் மன்மோகன் சிங், நாட்டில் மோடி அலை என்று ஏதுமில்லை’ என்று தெரிவித்திருந்த நிலையில், அவரது சகோதரர் பா.ஜ.க.வில் சேர்ந்தது பிரதமரின் குடும்பத்தாரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக கருத்து கூறிய பிரதமர் அலுவலக வட்டாரங்கள், அவர் பாஜகவில் இணைந்ததன் நோக்கம் என்னவென்று தெரியவில்லை என்றும் ஆனால், தனக்கு பிடித்தமான கட்சியை தெரிவு செய்ய அவருக்கு உரிமை உண்டு எனவும் தெரிவித்துள்ளன.
















