அகதிகளை திருப்பி அனுப்புவது குறித்து ஆஸி.யில் பாதுகாப்பு செயலாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ பேச்சு

Gotabaya-Rajapaksa5அவுஸ்தி­ரே­லி­யாவுக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்த பாது­காப்புச் செயலர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ, அங்­குள்ள போலி அக­தி­களை இலங்கைக்குத் திருப்பி அனுப்­பு­வது குறித்து உயர்­அ­தி­கா­ரி­க­ளுடன் பேச்­சுக்­களை நடத்­தி­யுள்ளார்.

அவுஸ்­திரே­லி­யா­வுக்குள் சட்­ட­வி­ரோ­த­மாக நுழையும் அகதி­களைக் கட்­டுப்­ப­டுத்தும்

நோக்கில், Operation Sovereign Borders என்ற பெயரில்
தொடங்­கப்­பட்ட இரா­ணுவ நட­வ­டிக்­கையின் ஒரு கட்­ட­மா­கவே, போலி­யான அக­தி­களைத் திருப்பி அனுப்­பு­வது குறித்து பாது­காப்புச் செய­ல­ருடன் அவுஸ்­ரே­லியா பேச்­சுக்­களை நடத்­தி­யுள்­ளது.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை கன்­ப­ராவில் உள்ள ஹயாட் விடு­தியில் நடந்த ஆட்­க­டத்தல் மற்றும் நாடு­க­டந்த குற்­றங்கள் தொடர்­பான அவுஸ்­ரே­லிய – இலங்கை கூட்­டுக்­கு­ழுவின் இரண்­டா­வது கூட்­டத்தில், பாது­காப்புச் செயலர் கோத்­தா­பய ராஜ­பக்ஷதலை­மை­யி­லான குழு இலங்கை தரப்பில் கலந்துகொண்­டது.

இந்தக் கூட்­டத்தில் பேசிய, அவுஸ்­ரே­லிய குடி­வ­ரவு அமைச்சர் ஸ்கொட் மொறிசன், முன்­னைய ஆட்­சிக்­கா­லத்தில் அவுஸ்­ரே­லி­யா­வுக்குள் சட்­ட­வி­ரோ­த­மாக நுழைந்­த­வர்­க­ளையும் திருப்பி அனுப்­பு­வதில் அவுஸ்­ரே­லியா உறு­தி­யாக இருப்­ப­தா­கவும் தெரி­வித்­துள்ளார்.

ஏனைய நாடுகள் வழி­யாக சட்­ட­வ­ரோ­த­மாக அவுஸ்­ரே­லி­யா­வுக்குள் நுழைந்­த­வர்­களை எந்தச் சூழ்­நி­லை­யி­லுவும் அவுஸ்­ரே­லியா ஏற்­றுக்­கொள்­ளாது என்றும் அவர் தெரி­வித்­துள்ளார்.

அவர்­களைத் திருப்பி அனுப்­பு­வதில் அவுஸ்­ரே­லியா உறு­தி­யாக இருப்­ப­தா­கவும் மொறிசன் தெரி­வித்­துள்ளார்.

அவுஸ்­ரே­லியப் பய­ணத்தை முடித்துக் கொண்டு கொழும்பு திரும்­பி­யுள்ள பாது­காப்புச் செயலர் கோத்­தா­பய ராஜ­பக்ஷ, அவுஸ்­ரே­லி­யாவின் எல்­லை­களைப் பாது­காப்­ப­தற்­காக நடந்து கொண்­டி­ருந்கும் இந்த நட­வ­டிக்­கையால், அவுஸ்­ரே­லி­யா­வுக்கும் இலங்கைக்குமிடை­யி­லான இரு­த­ரப்பு உற­வுகள் வலுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக குறிப்­பிட்­டுள்ளார்.

அவுஸ்­ரே­லியப் பய­ணத்தின் போது கோத்தாபய ராஜபக்ச, அந்த நாட்டின் உயர்மட்ட அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளை சந்தித்துப் பேசியுள்ளார்.

– சசிகரன் புண்ணியமூர்த்தி

Tags: , , , ,

Leave a Reply