இராணுவத்தின் நடவடிக்கைகளினால் வடக்கு பாடசாலை மாணவர்கள் பீதியில்

lk-army-tamil-studentsஇராணுவத்தின் நடவடிக்கைகளினால் வடக்கு பாடசாலை மாணவர்கள் பீதியடைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வடக்கில் இராணுவத்தினர் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் போன்றவர்களின் தகவல்களை திரட்டி வருவதாக குற்றம் சுமத்தியுள்ளார். இதனால் பாடசாலை சார் சமூகங்கள் அச்சமடைந்துள்ளன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக மன்னார், மடு மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

சில இடங்களில் மாணவர்கள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் புகைப்படங்கள் கூட எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சின் செயலாளரது அனுமதியின்றி இராணுவத்தினர் தன்னிச்சையாக தகவல்களை திரட்ட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாதுகாப்பு நோக்கிற்காக தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். எவ்வாறெனினும், இராணுவத்தின் இந்த நடவடிக்கையானது முற்று முழுதாக சட்டவிரோதமானது என ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags: , , ,

Leave a Reply