சிங்கள மக்கள் குடும்பக்கட்டுப்பாடு செய்வதால் எதிர்காலத்தில் எமது இனம் இல்லாது போய்விடும். குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கு மன்னர் காலத்தில் கூடக் கட்டுப்பாடுகள் இருக்கவில்லை. குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ளுமாறு சிங்களவர்களுக்கு மாத்திரம் ஆலோசனை வழங்கப்படுவது கவலை அளிக்கின்றது”என்று கூறியுள்ளார் மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா.
அமைச்சர் மேர்வின் சில்வா, கம்பஹா, கிரிந்திவெல பிரதேசத்தில் 8 குழந்தைகளைக் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு உதவிகள் வழங்குவதற்குச் சென்றிருந்தார். அங்கு வைத்து ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு கவலையுடன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறும் போது, “சிங்கள குடும்பங்கள் குறிப்பிட்ட தொகை குழந்தைகளை மாத்திரமே பெற்றுக்கொள்கின்றமை வருத்தமளிக்கிறது.
அதனால், இலங்கையில் நடைமுறையில் இருக்கும் குடும்பக்கட்டுப்பாட்டுத் திட்டத்தை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். கூடியளவு பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்களுக்குத் தேவையான பால்மா மற்றும் ஆடைகளை வழங்குவதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.
















