விஜய்- ஏ.ஆர்.முருகதாஸ் காம்பினேஷனில் தயாராகி வரும் ‘கத்தி’ படம் ஆரம்பித்ததிலிருந்தே பல தடங்கள்களை சந்தித்து வருகிறது. போதாக்குறைக்கு இது ராஜபக்ஷேவின் கூட்டாளி தயாரிக்கும் படம் என்பதால் ஈழத்தமிழர்கள் மத்தியில் எதிர்ப்பு வேறு…
இந்தப் படத்தில் ஏ.ஆர்.முருகதாஸுக்கு 20 கோடி, விஜய்க்கு 18 கோடி என நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்களுக்கு மட்டுமே சுமார் 50 கோடிக்கும் மேல் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. அதையெல்லாம் சேர்த்து கணக்குப் போட்டு பார்த்ததில் கத்தியின் பட்ஜெட் 75 கோடியை தாண்டி விட்டது.
இதனால் இப்போதிலிருந்தே போட்ட பணத்தை திருப்பி எடுக்கும் ஆசையோடு கத்தியின் சாட்டிலைட் ரைட்ஸை ஒரு தனியார் டிவியிடம் பெரிய தொகைக்குப் பேசினாராம் படத்தின் தயாரிப்பாளர் ஐங்கரன் கருணா. அவர் எதிர்பார்த்தபடியே ஒரு பிரபல தனியார் டிவி ஒன்று கத்தியின் சாட்டிலைட் ரைட்ஸை வாங்க முன் வந்து விட்டது.
ஆனால் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட ஏ.ஆர்.முருகதாஸோ செம டென்ஷனாகி விட்டாராம். என்னைக் கேட்காமல் எப்படி நீங்கள் சாட்டிலைட் ரைட்ஸை விற்பீர்கள். என்றவர் என்னோட படத்தை எப்போதுமே நான் ஒரு குறிப்பிட்ட டிவிக்குத்தான் கொடுப்பது வழக்கம். அப்படித்தான் இந்தப் படத்தையும் அவர்களுக்கே கொடுப்பதாக வாக்குக் கொடுத்திருக்கிறேன். அப்படி இருக்கும்போது என்னைக் கேட்காமல் அந்த டிவிக்குக் கொடுத்தது ஏன்? என்று காட்டு கத்தி கத்தினாராம்.
அப்படி அவர் குறிப்பிட்ட டிவிக்கு கொடுக்கும் போது அவருக்கும் ஒரு பெரிய தொகை கமிஷனாகப் போகுமாம். அந்தக் கமிஷன் கத்தியின் கட்டாகி விட்டதே என்பது தான் முருகதாஸின் கோபத்துக்கு முக்கிய காரணம். ஆனால் தயாரிப்பாளரோ அவர் பேசைக்கேட்டபாடில்லை. இதனால் கத்தி படப்பிடிப்பு தொடர்ந்து நடக்குமா என்ற சந்தேகம் பட யூனிட்டினருக்கு வர ஆரம்பித்து விட்டது.
















