கருக்கலைப்பு செய்து கொள்ளும் பெண்களில் 90 வீதமானவர்கள் திருமணமானவர்கள்

abotionகருக்கலைப்பு செய்து கொள்ளும் பெண்களில் 90 வீதமானவர்கள் திருமணமானவர்கள் என கண்டி போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் டொக்டர் டபிள்யூ.அபயகோன் தெரிவித்துள்ளார்.

திருமணம் செய்து கொண்ட பெண்களே அதிகளவில் கருவை கலைத்துக் கொள்வதற்காக வைத்தியர்களை நாடுவதாகக குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு உதவி கோரிய போதிலும் சட்டவிரோதமானது என்பதனால் அவ்வாறு கருக்கலைப்பு செய்வதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குடும்பத் திட்ட முறைமைகளை பின்பற்றாமையே இவ்வாறு கருக்கலைப்புக்கள் அதிகமாக இடம்பெறுவதற்கான காரணம் எனத் தெரிவித்துள்ளார்.

குடும்பத் திட்டமிடல் தொடர்பில் பல்வேறு முறைமைகள் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த முறைமைகள் குறித்து பெண்கள் கவனம் செலுத்துவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply