முகம் தெரியாது ஹெல்மட் அணிவோருக்கு சோதனை ஆரம்பம்

helmetநாடு முழுவதும் முகத்தை முழுவதுமாக மூடிய நிலையில் தலைக் கவசங்களை அணிந்து செல்லும் மோட்டார் சைக்கிள் ஓட்டிகளை சோதனையிடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அண்மைக்காலமாக இவ்வாறான தலைக்கவசங்களை அணிந்து செல்வோர் வங்கிகளிலும் நகைக்கடைகளிலும் நடத்திய கொள்ளைகளை அடுத்தே சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முகத்தை மூடிய தலைக் கவசங்கள் இலங்கையில் இன்னமும் தடை செய்யப்படவில்லை.

எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் மேற் கொண்டு வருகின்றோம் என்று பொலிஸார் கூறினர்.

Tags: ,

Leave a Reply