இரண்டாவது முறையாக ஏ.எம்.ரத்னத்துக்கு அஜித் கால்ஷீட் கொடுத்தது ஏன்?

ajith5தயாரிப்பாளர்களை பொறுத்தவரை, அஜித் போன்ற முன்னணி ஹீரோக்களின் கால்ஷீட் ஒரு தடவை கிடைத்தாலே அது கடவுளின் வரம் கிடைத்த மாதிரி!

ஏ.எம்.ரத்னத்துக்கோ அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க கால்ஷீட் கொடுத்து அவருக்கு இன்ப அதிர்ச்சியையும், மற்ற தயாரிப்பாளர்களுக்கு வயித்தெரிச்சலையும் கொடுத்துள்ளார் அஜித்.

ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் ‘ஆரம்பம்’ படத்தில் நடித்த அஜித், தற்போது அதே நிறுவனத்தின் தயாரிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தைப் பற்றிய அறிவிப்பு வெளியானநாள் முதல், இதோ இப்போது வரை ஏம்.ரத்னத்துக்கு இரண்டாவதுமுறையாகவும் அஜித் ஏன் கால்ஷீட் கொடுத்தார்? என்ற கேள்வி படத்துறையில் உள்ள பல தயாரிப்பாளர்களை குடைந்து கொண்டிருக்கிறது.

விடை தெரியாமல் மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

தயாரிப்பாளர் இப்படி நினைப்பதற்கு ஒரு காரணமும் உண்டு…!

ஏ.எம்.ரத்னம் முன்னணி தயாரிப்பாளராக விளங்கியபோது அஜித்துக்கு அட்வான்ஸ் கொடுத்திருந்தார்.

அதன் பிறகு ஏற்பட்ட ஒரு பிரச்சனையின் காரணமாக கழுத்தில் கத்தியை வைக்காத குறையாக கொடுத்த அட்வான்ஸை அஜித்திடமிருந்து திரும்ப வாங்கினார்.

அப்படிப்பட்ட ரத்னத்துக்கு இரண்டாவது முறையும், அதுவும் அடுத்தடுத்து கால்ஷீட் கொடுத்திருக்கிறாரே அஜித்?

இதில் ஏதாவது உள்குத்து இருக்கிறதா?

கால்ஷீட் கொடுப்பதுபோல் கொடுத்து கடைசியில் கழுத்தை அறுத்துவிடுவாரோ?

என்றெல்லாம் பல அபிப்ராயங்கள்..!

ஏ.எம்.ரத்னத்துக்கு இரண்டாவது தடவை கால்ஷீட் கொடுக்கப்பட்டது ஏன்?

– என்று விசாரித்தபோது நமக்குக் கிடைத்த தகவல் இது..

‘ஆரம்பம்’ படம் வெளியாகவிருந்த நேரத்தில் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா ஏ.எம்.ரத்னம் பற்றி தவறான செய்திகளை பரப்பி வந்தாராம்.

அதாவது ‘ஆரம்பம்’ படம் வெளியான அதேநாளில் ஞானவேல்ராஜாவின் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படமும் வெளியானது.

அப்போது தியேட்டர்களை புக் பண்ண நடந்த போட்டியில், ”இந்தப் படத்தோடு ஏ.எம்.ரத்னம் காணாமப் போயிடுவாரு. ஆனா நான் தொடர்ந்து படம் எடுக்கிற புரட்யூஸர். அதனால் என் படத்துக்கு தியேட்டர் கொடுங்க” என்று ஏ.எம்.ரத்னம் பற்றி ஞானவேல்ராஜா செய்த தப்பான பிரச்சாரம் அஜித் காதுக்கு வந்திருக்கிறது.

”நம்மை வைத்து படம் எடுத்தவருக்கு இப்படியொரு அவமானமா?” என்று கொதித்துப்போனாராம் அஜித்.

அதன் காரணமாகவே ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் இன்னொரு படம் நடிக்க கால்ஷீட் கொடுக்கும் அந்த முடிவை உடனடியாய் எடுத்தாராம் அஜித்.

Tags: , ,

Leave a Reply