இரு ரயில்கள் நேருக்குநேர் மோதி விபத்து : 75 பேர் காயம்

train-accகுருநாகல் பொத்துஹெர ரயில் நிலையத்தில் இரண்டு ரயில்கள் நேருக்குநேர் மோதியதில் 75 பேர் காயமடைந்துள்ளதோடு 5 பேரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. (முதலாம் இணைப்பு) குருநாகல் பொத்துஹெர ரயில் நிலையத்தில் இரண்டு ரயில்கள் மோதியதில் 38 பேர் காயமடைந்துள்ளனர்.

வவுனியாவில் இருந்து மாத்தறைக்கு பயணித்துக்கொண்டிருந்த ரெஜின ரயில், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பளை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கடுகதி ரயிலுடன் மோதியுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் தற்போது குருநாகல் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இவ்விபத்து காரணமாக குருநாகல் – பொல்கஹவெல இடையிலான ரயில் சேவையும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் 70 பேர் வரை குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags: ,

Leave a Reply