புலம்பெயர் தமிழர் அமைப்புகளுக்கு இலங்கை அரசு விதித்திருக்கும் தடை தொடர்பாக கனடா எதிர்கட்சியான புதிய ஜனநாயகக் கட்சி, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஜொன் பெயார்டைச் சந்தித்துப் பேச்சு நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது.
இலங்கை அரசின் தடையை அடுத்து சில கனேடிய நிறுவனங்களால் இலங்கை வாழ் தமிழர்களுக்கு உதவிகள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது.
குறித்த தடை காரணமாக சில கனேடிய நிறுவனங்களால், இலங்கைத் தமிழர்களுடன் தொடர்புகளைப் பேணவோ அல்லது உதவிகளை வழங்கவோ முடியாத நிலை காணப்படுகின்றது என்று சுட்டிக்காட்டுகின்றது புதிய ஜனநாயகக் கட்சி.
புலம் பெயர் அமைப்பு கள் மீதான தடை மனித உரி மைச் செயற்பாட்டாளர்களின் களச் செயற்பாடுகளையும் கடுமையாகப் பாதிக்கும் என்றும் அந்தக் கட்சி மேலும் கூறியுள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு அரசுக்கு புதிய ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத் துள்ளனர். அந்தக் கடிதத்தில், “போர் இடம்பெற்ற காலப்பகுதியில் இடம்பெற்றன என்று கூறப்படும் குற்றங்கள் தொடர் பில், சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அமைப்புகளே தடை செய்யப்பட்டுள்ளன.
ஐ.நா.மனித உரிமைகள் சபையில் அண்மையில் இலங்கைக்கு எதிராக நிறை வேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவு வழங்கிய இரு கனேடிய நிறுவனங்களும் தடை செய்யப்பட்டுள்ளன.
இந்தத் தடையால் கனேடிய நிறுவனங்களால் இலங்கையிலுள்ள நிறுவனங்களுடன் தொடர்புகளைப் பேணவோ, அவர்களுக்கு நிதி வழங்கவோ அல்லது நிதி திரட்ட முடியாது போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மனித உரிமை மீறல்கள் தொடர் பான சுயாதீன விசாரணைக்கு இலங்கை அரசு தொடர்ச்சியா கத் தடைகளை ஏற்படுத்தி வருகின்றன. இந்த விடயத்தில் கனேடிய அரசின் நிலைப் பாடு என்ன என்பதை நாம் அறிந்துகொள்ள விரும்புகின் றோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
















