ஆஸியில் இடம்பெற்ற புது வரவுகளின் புதிய சங்கமம்

aus-vila1தமிழ் மக்களின் கலை கலாச்சாரபரிமாணங்களை புதுவரவுகளின்விழுமியங்களோடு வெளிப்படுத்தும் நிகழ்வாக அரங்கேறியது புது வரவுகளின் புதிய சங்கமம்.

Community Migrant Resource Centre எனப்படும் குடிவரவாளர்களுக்கான வள மையத்தின் அனுசரணையுடன் சந்திப்போம்வாழ்த்துவோம் தமிழ் நலன்விரும்பிகள் இணைந்து நடாத்திய இந்த நிகழ்வு சித்திரைத் திங்கள் பதின்மூன்றாம் நாள் ஞாயிற்றுக்கிழமை பகல் இரண்டு மணிக்கு Parramatta நகர மண்டபத்தில் ஆரம்பமாவதாகஅறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஒரு மணிக்கே கூட்டம் கூடத் தொடங்கிவிட்டது. தமிழர்கள் மட்டுமல்ல, கணிசமான அளவில் வேற்று இனத்தவர்களும் நிகழ்சிக்காக வந்திருந்தார்கள்.

aus-vila2மண்டபத்தின் நுழைவாயிலில் வரவேற்புக் குழுவினர் தமிழும் சைவமும் மணக்க மணக்க வரவேற்றனர் தமிழர்களின் பண்பாட்டுக்கு ஏற்ப, பாரம்பரியமுறைகளில் மிக்க அழகாகத் தலை வாரிப் பூச்சூடி நெற்றித் திலகம் வைத்து நெற்றிச்சுட்டி அணிந்து பட்டுப் பாவாடை தாவணி சேலை உடுத்து ஒட்டியாணம் பூண்டு வண்ண மயில்கள் எனப் பாவையர்களும் வண்ணமுறக் காட்சியளித்தனர்.

தழிழ் பண்பாடு பக்திப் பரவசமான புதுவரவுகளின் புதிய சங்கமம் -2014 நிகழ்வுமாலை இரண்டு மணிக்கு இந்த விழா தொடங்கியது. ஒரு கணம் அரங்கத்தில்நிசப்தம்! நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கிய திரு. R.JT. கௌசிக், திரு. வரோதயன் மற்றும் செல்வி சமந்தா விக்னேஸ்வரன் குரலுடன், நிகழ்வுக்கு உங்கள் அனைவரையும் வருக! வருக! என்று அன்புடன் வரவேற்கின்றோம்… புது வரவுகளின் புதிய சங்கமம் இது தமிழ் புத்தாண்டு 2014 நிகழ்வு என மண்டபம் அதிர்ந்த கரகோஷத்துடன் திரைவிலகியது.

இவ்விழாவின் பிரதானஅனுசரணையாளரான Community Migrant resource Centre நிறைவேற்றுப் பணிப்பாளர் Melissa Monteiro, அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் Parramatta பிரதிநிதி Julie Owen மற்றும் Greenway பிரதிநிதி Michelle Rowland ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். Parramatta, Holroyd மற்றும் Blacktown உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளும், வைத்தியக் கலாநிதிகளான V. மனமோகன் மற்றும் P. கேதீஸ்வரன் ஆகியோரும், தொழில்கட்சி பிரமுகர் சூசை பெஞ்சமின் மற்றும் சமூகப் பிரமுகர்கள் வருகை தந்திருந்து மங்கள விளக்கேற்றி சிறப்பித்திருந்தார்கள்.

மௌனப் பிரார்த்தனை தொடர்ந்து அவுஸ்திரேலிய கீதம் பாடி புது வரவுகள் தமது திறமையினை வெளிப்படுத்தியிருந்தனர். பாடலின் உச்சரிப்பு சுருதியுடன் குரலின் ஏற்றத் தாழ்வுகள் என்பன மிகவும் நேர்த்தியாகவே அமைந்திருந்தது

முதல் நிகழ்வாக, ‘தமிழ் மொழி வாழ்த்து’ புத்மையாக ஆரம்பித்தது. இந்தப் பூமியில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் வசமாகி விடுவது இயல்பு ஆகும். ‘தமிழ்த் தாயை வணங்கி தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலுக்கு நாட்டிய செல்வி அருளினி நடனத்தின் மூலம் நடனத்திற்கும் குருவிற்கும் அவைக்கும் வணக்கம் வைத்தார். நாற்றிசைக்கும் கரம் கூப்பி ஆடிய வரவேற்பு நடனம் நல்ல ஆரம்பமாகவும் நேர்த்தியாகவும் இருந்தது.

சந்திப்போம்வாழ்த்துவோம் தமிழ் நலன்விரும்பிகள் குழாத்தின் ஒருங்கிணைப்பாளர் கொன்ஷிலா ஜெரோம் வழங்கிய வரவேற்புரையைத் தொடர்ந்து, Melissa Monteiro (Community Migrant Resource Centre), Julie Owen (Parramatta MP), Dr. P. கேதீஸ்வரன், திரு சூசை பெஞ்சமின் ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.

நாடக உலகம் இயல் இசை சேர்ந்த அழகியல் கொண்டது. முத்தமிழும் இணைந்து கிடக்கும் ஒரு பெருமை கொண்டது . உணர்வுகளுக்குமுக்கியத்துவம் கொடுக்கும் ஒரு சிறந்த நாடகம் பார்வையாளர்களையே நாடகக் கதாபாத்திரங்களாக உணரச் செய்யும் சொந்தம். பிறந்த பொன்னாட்டை விட்டு கனத்தோடும் ரணத்தேடும் வெளியேறிய நாட்களை நினைவுபடுத்தும் ‘அர்ப்பணம்’ என்ற புதிதளித்தல் அடுத்து மேடையேறியது. தமிழினப் படுகொலையே முள்ளிவாய்க்காலில் அரங்கேறியுள்ளது – பல ஆயிரக் கணக்கான வீரர்கள் பொதுமக்கள் ஈழ மண்ணில் துடிதுடித்து வீழ்ந்தார்கள் – அந்த மகத்தான மனிதர்களின் உயிர் உறையும் கதைகள் வீதியோரங்களிலும் பற்றைகளிற்குள்ளும் புதையுண்டு போயின என்பதை இந்த உயிரோட்டமான நாடகம் கண் முன் கொண்டு வந்தது.

முள்ளிவாய்க்கால் கொடூர நிகழ்வின் போது அதில் சிக்கி தப்பித்துவாழும் பலரது உண்மைக் கதைகளின் பிரதிபலிப்பே இந்த நாடகம். ஈழத்தில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்த போர் (தவிர்ப்பு) வலயப் பகுதியில் இருந்து வருகை தந்திருந்த திரு N.BA. நிக்சன் (சர்மா ) அவர்களின் நெறியாள்கையில் வலிமையான கதையினாலும் தேர்ந்த அளவான நடிப்பிலும் வார்த்தெடுக்கப்பட்டிருந்தது இந்த நாடகம்.

வாழ்க்கையின் சுகங்களையும் இன்பங்களையும் இழந்துவிடிகிறது ஒவ்வொரு இரவும். குருதி குடிப்பதற்காகவே விடியல் கூட வருகிறது. ஆனாலும் எஞ்சியவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், இன்னும் வலிகளுடன். தங்கள் முற்றங்களில் வெடித்துச் சிதறியிருப்பது குண்டுகளின் எச்சங்கள் மட்டுமல்ல, தங்கள் உறவுகளின் உடல்களும் தான் என்பதை அவர்கள் உணர்கிறார்கள். ஓடி ஓடி ஓய்ந்து போன கால்களுடன் பிணங்களைப் பார்த்துப் பார்த்து மரத்துப் போனது மனதும் தான். அழுவதற்காகத் தவிர வாய்கள் திறக்கப்படவேண்டிய அவசியமே கிடையாத கொடுமை கண்களின் முன் விரிந்தது.

உண்ண உணவில்லை. போய்க்கொண்டிருக்கும் உயிர்களை அருகிலிருந்து பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர எதுவுமே செய்ய முடியாத சடங்களாகிப் போகிறார்கள் அவர்கள். துன்பங்களும் துயரங்களும் அவர்களுக்கொன்றும் புதிதில்லைத் தான். விரக்தியின் விளிம்பில் நின்று தனிமையை உணர்கிறார் ஒருவர். புதிய விடியலை நோக்கி தனிமையிலிருந்து விடுபட்டு புதுயுகம் நோக்கி புறப்படுவதும் அனைவரின் ஒற்றுமையின் பலத்தினையும் நாடக அமைப்பு யுத்திகளால் சிறப்பாகஅமைந்திருக்கிறது. காட்சி அமைப்பு எளிமையாக இருந்தது. கடந்த கால நிகழ் கால பிரிவினைகளை – இசை பாடல் மற்றும் சுவைகளாகிய பயம் வீரம் இழிப்பு அற்புதம் இன்பம் அவலம் கோபம் நடுநிலை ஆகிய உணர்வுகளை – புதுவரவுகளின் உடல் மொழி முக பாவம் போன்ற உடல் மெய்பாடுகளால் அபிநயித்த நாடகத்தில் காட்சிகள் அருமையாகவும் உயிரோட்டமாவும் இருந்ததால் நாடகத்தில் எந்தத் குறைபாடும் தெரியவில்லை.
போர்க்களத்தைச் சித்தரிக்க அமைக்கப்பட்டிருந்த நடனம் மிகவும் சிறப்பாக இருந்தது.

சித்திரவதைக் காட்சிகளும் மிகைப்படுத்தல்கள் இல்லது தத்துரூபமாக இருந்தன. நாடக கலைஞர்கள் அதை வெளிப்படுத்திய விதம், பார்வையாளர்களுக்கு ஆக்ரோசமான உணர்வை நிச்சயம் கொடுத்திருக்க வேண்டும் . விசும்பும் குரல்களும் விம்மல்களும் பெருமூச்சுகளும் கண்ணீர்த் துளிகளும் மண்டபத்தில் எங்குமே உலர்விழிகள் இருக்கவில்லை என்பதை உறுதி செய்தன. கலைஞர்கள் எல்லோருமே பார்வையாளர்களின் முழுமையான பாராட்டையும் பெற்றனர்.
நாட்டியாஞ்சலி நிகழ்வினை இளைய தலைமுறை அரங்கினுள் நிகழ்த்திற்று. ஆகியோர் வேறுபட்ட நடன வடிவங்களைத் தெரிவு செய்திருந்தனர். சதங்கையின் நாதம் நிரம்பி நல்ல தாளத்தோடு கதாபாத்திரத்திற்கேற்ப கருத்துக்களையும் உணர்ச்சி களையும் வெளிப்படுத்தி பாடலிலே வரும் ஒவ்வொரு வார்த்தையினது கருத்தையும் வாயினாற் சொல்லாது கையினாலும் தலை கண் கழுத்து முதலிய அங்கங்களினாலும் பார்ப்பவர் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம் அபிநயித்து, பாவம் பல்வேறு அங்க நிலைகள் போன்றவை மன எழுச்சிகளை உணர்த்தப் பயன்படுத்தி பரத நாட்டியத்தின் மூலம்அபிநயங்கள் அபிநயிக்கப்பட்டு நாட்டியங்கள் பார்ப்பவர்களை பரவசப்படுத்தின.
நடன வேகமும், இசையும் மெய் சிலிர்க்க வைத்தன. நடன அமைப்பு, ஒவ்வொரு காட்சிக்கும் வித்தியாசமான முறையில் உடனே ஈர்க்கும் வகையில் அட்டகாசமான நடன நெறியாள்கையினைச் செய்திருந்தார், ஆடல்செல்வன், நர்த்தனகீர்த்தன், இளம்கலைச் சோதி என பல விருதுகளையும் பெற்ற N.BA.நிக்சன் சர்மா .

பாடகர்கள் Dr கௌரிபாலன், ஜிவாஜிராஜா , புதியமுகம் அல்பிரோட், யூட்சுதர்சனன், தங்கராஜா, சங்கர் என அடுத்தடுத்து பாடகர்கள் மேடைக்கு வந்தார்கள். அவர்களின் அழகாக இசையுடன் அமிர்தமாக குரல்களில் மாயம் செய்து பரிசளித்திருந்தார்கள். புதிய பாடல்கள், பழைய பாடல்கள் என்று பாடகர்கள் தொடர்ந்து பாட வர, இன்றைய இளைய தலைமுறைப் பாடல்களுக்கு ரசிகர்கள் கூட்டமும் அவர்களோடு சேர்ந்தே பாடியதும் ஆடியதும் நன்றாயிருந்தது. மொத்தத்தில் மன நிறைவான இன்னிசை விருந்து என்று தயங்காமல் சான்றிதழ் தரலாம்.

மனிதர்களின் மகிழ்ச்சிக்கு முக்கிய காரணமாய் அமைந்திருப்பதில் குறிப்பிடத்தக்கது கலை. ஒரு நாட்டின் வரலாறு, பண்பாடு, வாழ்வியலை மற்றைய நாட்டினரும் அறிந்து கொள்ளும் வகையில் அமைவது கலை வடிவங்கள். தாயகத்தில் மேலை நாடுகளிலிருந்து பல்வேறு கலை வடிவங்கள் சென்று வேரூன்றும் இவ்வேளையில் தாயகத்தின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் கிராமியக்கலைகள் Parramatta மேடையில் மலர்ந்தன. கிராமிய நடனக்கதம்பமாக கிராமியப் பாடல்களுக்கு கும்மி, ஒயிலாட்டம், கரகம் என, அசைவுகளும் உடை ஒப்பனைகளும் கொண்டு குழு முறையில் பல வடிவமைப்புக்களையும் கொண்டு தாளம்தவறாது , முகங்கள் கதை பேச இடைவிடாது தொடர்ந்து ஆடியதில் பங்குகொண்ட கலைஞர்கள் பார்வையாளர் எல்லோரின் பாராட்டுகளையும் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

பாரம்பரிய நடனத்திலே புதுமை புகுத்தி மேற்கத்திய நடனத்தையும் கலந்து அரங்கத்தையே அதிர வைத்த தழிழ் பசங்க என்னும் தொனிப் பொருளில் நமது நாட்டுப்புறமணம் பரப்பி நடனமாடிய இளைஞர்கள் தங்களது தனித்துவத்தை நிரூபித்தனர். பார்வையாளர்களின் பாராட்டுகளையும் பெற்றனர்.
சிறந்த முறையில் நடாத்த தியாகமனப்பான்மையுடன் செயற்பட்டஉறுப்பினர்கள் நடிகர்கள் தொழில்நுட்பக்கலைஞர்கள் ஒலி ஒளி அமைப்பாளர்கள்மேடை மற்றும் ஒப்பனைக் கலைஞர்கள்தொண்டர்கள் அனைவரும்பாராட்டிற்குரியவர்கள். இந்த நிகழ்ச்சியை நெறியாள்கை செய்து வெற்றிகரமாக நடாத்தி முடிக்க உதவியவர்களுக்கும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டவர்களுக்கும் ஒவ்வொரு பார்வையாளருக்கும் புது வரவுகளின் புதிய சங்கமம் நிகழ்ச்சியின் நன்றி கூறலினை N.BA. நிக்சன் சர்மா செய்தார்.

மண்டபத்தின் பொதுவான ஒலித்தரம் செழுமையற்றுக் காணப்படிருந்தது ஒரு குறிப்பிடத்தக்க குறைபாடாகும். பாடல் ஒலிபரப்புகளிலும் சில தொழில்நுட்ப விக்கல்கள் காணப்பட்டிருந்தன. இவைகள் எதிர்கால நிகழ்வுகளில் களையப்படுதல் முக்கியமானதாகும்.

விழா முடிவில் பாரம்பரியத்தைவெளிப்படுத்தும் வகையில் நாவுக்கினிய பல்சுவை சிற்றுண்டிகளும் உணவுகளும் குளிர்பானங்களும் எல்லாருக்கும் வழங்கப்பட்டன.
இலக்கு வலுவாக இருந்தால் பாதை தெளிவாக இருக்கும். இலங்கை அரசாங்கம் மற்றும் இராணுவத்தினதும் அடக்குமுறை காரணமாக உயிருக்குப் பயந்து புலம்பெயர்ந்து, நிம்மதியாக வாழலாம் என எண்ணி உயிரைப் பணயம் வைத்து படகு மூலமாக அவுஸ்திரேலியாவிற்கு வருகை தந்திருக்கும் புது வரவுகளின் புதியசங்கமம் நிகழ்வானது மண்டபத்தில் அரங்கம் நிறைந்த மக்களுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது. முழுக்க முழுக்க புது வரவுகள் மற்றும் உள்ளூர்க் கலைஞர்களைக் கொண்டு நிகழ்த்தப்பட்ட நிகழ்வு இது என்பது குறிப்பிடக் கூடிய ஒன்றாகும்.

Tags: , ,

Leave a Reply