லண்டன் சென்று கொண்டிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் குண்டு என பீதியை கிளப்பிய பிரித்தானிய பிரஜைக்கு மூன்று ஆண்டு கால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 20ம் திகதி கொழும்பில் இருந்து லண்டன் சென்ற ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் குண்டு இருப்பதாக புரளியை கிளப்பியமைக்காக எலன் படேய் என்ற பிரித்தானியரே கைது செய்யப்பட்டார்.
அவர்களில் எலன் படேய் என்பவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
















