பெண் பத்திரிகையாளர் அம்ரிதாவுடனான தொடர்பு உண்மையே: காங். தலைவர் திக்விஜய்சிங் ஒப்புதல்!!

digvijayasing-amrita-rai-காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் அக்கட்சியின் பொதுச்செயலருமான 67 வயது திக்விஜய்சிங் அதிரடியாக ராஜ்யசபா டிவியின் நிகழ்ச்சி தொகுப்பாளர் அம்ரிதா ராய்க்கும் தமக்கும் தொடர்பிருக்கிறது..அவரையே திருமணம் செய்ய இருக்கிறேன் என்று அறிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் மனைவி குறித்து நீண்டகாலமாக கேள்வி எழுப்பியவர் திக்விஜய்சிங். நரேந்திர மோடியும் வேறுவழியின்றி தமது வேட்புமனுவில் மனைவி இருப்பதை ஒப்புக் கொண்டார்.

இப்போது அப்படியொரு சிக்கலில் மாட்டியிருக்கிறார் திக்விஜய்சிங். ராஜ்யசபா டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் அம்ரிதாவுக்கும் திக்விஜய்சிங்குக்கும் இடையே நெருக்கமான உறவு இருப்பதாகவும் இது தொடர்பான சில புகைப்படங்களும் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. திக்விஜய்சிங் ஒப்புதல் இது குறித்து எதிர்க்கட்சிகள் கிடுக்குப் பிடி கேள்வி எழுப்பின. இப்போது திக்விஜய்சிங் வேறுவழியின்றி தமக்கும் அம்ரிதாவுக்கும் தொடர்பு இருக்கிறது என்று சொல்வதில் எனக்கு எந்த தயக்கும் இல்லை என்று தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

Tags: , ,

Leave a Reply