ஒன்லைன் மூலம் பொருட்களை விற்பனை செய்யும் பிரபல நிறுவனமான அமேசான் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.
இதன் படி அந்நிறுவனம் தயாரித்த முதலாவது ஸ்மார்ட் கைப்பேசியின் புகைப்படம் இணையத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இதன்படி இக்கைப்பேசியானது 4.7 அங்குல அளவுடையதும், 1280 x 720 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், பிரதான நினைவகமாக 2 GB RAM, Quad Core Qualcomm Snapdragon Processor ஆகியவற்றினைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அமேசானின் Fire இயங்குதளத்தில் இக்கைப்பேசி செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
















