ஆபாச நடிகைகளின் வங்கிக்கணக்குகள் திடீர் முடக்கம். அமெரிக்காவில் பெரும் பரபரப்பு.

sexi-girlsசிகாகோ நகரை தலைமை அலுவலகமாக கொண்டு இயங்கி வரும் Chase bank சமீபத்தில் ஆபாச படங்களில் நடிக்கும் நடிகைகளின் வங்கிக்கணக்குளை முடக்கியுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் 22 வயது ஆபாச நடிகை Layton Benton, தனது வங்கிக்கணக்கில் இருந்து ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்க சென்றபோது, அவருடைய வங்கிக்கணக்கு முடக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து Layton Benton, வங்கியிடம் விளக்கம் கேட்டபோது ஆபாச படங்களில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகளின் வங்கிக்கணக்கை முடக்குமாறு தங்கள் தலைமையிடத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளதாகவும், இதுகுறித்து அவரது இமெயில் முகவரிக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பே தகவல் அனுப்பியிருந்ததாகவும் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த Layton Benton, நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதாக மிரட்டியுள்ளார்.

அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கித்துறையான JP Morgan Chase, நிறுவனத்தின் துணைநிறுவனம்தான் Chase bank. சமீபத்தில் வந்த புகார்களின் அடிப்படையில் தங்கள் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ஆபாச பட நடிகர்கள் மற்றும் நடிகைகளின் நூற்றுக்கணக்கான வங்கிக்கணக்குகளை நிரந்தரமாக மூடிவிடும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின்படி பல நூற்றுக்கணக்கான வங்கிக்கணக்குகள் முடப்பட்டன. இதனால் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags: , ,

Leave a Reply