கணவரிடம் சண்டை போட்டு இரண்டு குழந்தைகளையும் லாரியின் முன் தூக்கிவீசிய சீனப்பெண். அதிர்ச்சி செய்தி

larryசீனாவில் உள்ள 33 வயது பெண் ஒருவர் தனது கணவரிடம் சண்டை போட்ட ஆத்திரத்தில் தனது இரண்டு குழந்தைகளையும், லாரியின் சக்கரங்களுக்கு இடையில் தூக்கி போட்டுள்ளார். இதில் 14 மாத பெண் குழந்தை பரிதாபமாக பலியானார். 6 வயது சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த அதிர்ச்சி சம்பவத்தால் சீனாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சீனாவில் உள்ள 33 வயது Hu Chen, என்ற பெண் தனது கணவர் Hu Hsia அவர்களுடன் நேற்று சண்டை போட்டதாக தெரிகிறது. இந்த ஆத்திரத்தில் தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் வீட்டிற்கு வெளியே இழுத்துக்கொண்டு வந்த அவர், இருவரையும் மிகவேகமாக வந்துகொண்டிருந்த லாரியின் முன் தூக்கி வீசினார். இந்த அதிர்ச்சி சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் மிக வேகமாக செயல்பட்டு 6 வயது சிறுவனை காப்பாற்றினார். ஆனால் 14 மாதமே ஆன பெண் குழந்தை பரிதாபமாக லாரியின் சக்கரங்களில் நசுங்கி பலியானார்.

இந்த சம்பத்தால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் கணவர் மயக்கமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்த காவல்துறை அதிகாரிகள் Hu Chen,ஐ கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இவருடைய குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரணதண்டனை கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக சீன காவல்துறையினர் தெரிவித்தனர்.

Tags: , ,

Leave a Reply