நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்த பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி “பிரியங்கா என் மகள் போன்றவர்’ அவர் தவறாக எதுவும் பேசினாலும் அதை நான் பெரிதுபடுத்த மாட்டேன் என்று கூறினார். அதற்கு பதிலடி கொடுத்த பிரியங்கா, “நான் எப்போது ராஜீவின் மகள் என்று கூறுவதையே பெருமையாக கருதுகிறேன். மோடியை என்னால் தந்தையாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று காட்டமாக கூறியிருக்கிறார்.
மோடியின் இந்த பேச்சு குறித்து கருத்து தெரிவித்த, நிதி அமைச்சர் சிதம்பரம், ‘பிரியங்கா தன் மகள் போன்றவர் என, மோடி கூறியதில் மகிழ்ச்சியே. அதே நேரத்தில், மோடியை தன் தந்தையைப் போன்றவராக, பிரியங்கா நினைப்பார் என, நான் உறுதியாக நம்பவில்லை’ என, தெரிவித்தார்.
மேலும் தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் பிரியங்கா, பாதுகாப்பு வீரர்களின் பாதுகாப்பு வளையத்தை மீறி மக்களுடன் மிக நெருக்கமாக சென்று வருவதால் அவருடைய இந்த நடவடிக்கைக்கு உத்தரபிரதேச மாநில உள்துறை செயலாளர் கவலை தெரிவித்துள்ளார். பிரியங்கா பரபரப்பை ஏற்படுத்துவதற்காக பாதுகாப்பு வளையத்தை மீறுவது நல்ல நடவடிக்கை அல்ல என்று அவர் கூறியுள்ளார்.
















