கோபி உட்பட புலித் தலைவர்களை கொலை செய்தற்கு சரியான புலனாய்வுத் தகவல்களே காரணம்: இராணுவத் தளபதி!

thayaசிறிலங்கா இராணுவப் புலனாய்வு பிரிவினர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார். போர் இடம்பெற்ற 30 ஆண்டு காலப்பகுதியுடன் ஒப்பீடு செய்யும் போது தற்போது புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆகவே பயங்கரவாதத்தின் நிழலைக் கூட தோன்ற அனுமதிக்கப்பட மாட்டாது. அண்மையில் கோபி உள்ளிட்ட புலித் தலைவர்களை நெடுங்கேணியில் கொலை செய்வதற்கு சரியான புலனாய்வுத் தகவல்களே காரணமாகியது.

இராணுவ புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பே புலி உறுப்பினர்களை அடையாளம் கண்டு தாக்குதல் நடத்த வழியமைத்தது.

தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் படையினர் நூறு வீத அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர்.

இதனால் மக்கள் பாதுகாப்பு குறித்து அஞ்ச வேண்டிய அவசியமில்லை என தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர் காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply