ஆப்கானிஸ்தானில் சிறிய மலை சரிந்து விழுந்து ஒரு கிராமமே புதைந்தது. 2000 பேர்களின் கதி என்ன?

afkanistanஆப்கானிஸ்தானில் பெய்த தொடர் மழை காரணமாக அங்கிருந்த ஒரு சிறிய மலை திடீரென சரிந்து அருகிலுள்ள கிராமத்தின் மீது விழுந்து மாபெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் 2000 வரை இந்த விபத்தில் காணவில்லை என்று கூறப்படுகிறது. ஒருசில நிமிடங்களில் ஒரு கிராமமே அழிந்துவிட்ட இந்த அதிர்ச்சி சம்பவத்தால் நாடு முழுவதும் பீதி கிளம்பியுள்ளது.

வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள Badakhshan என்ற நகரின் அருகே உள்ள ஒரு கிராமத்தின் அருகேயுள்ள ஒரு சிறிய மலை தொடர்ச்சியாக பெய்த கனமழையின் காரணமாக சரிந்து கிராமத்தின் மேல் விழுந்தது. இதனால் அந்த கிராமத்தில் இருந்த சுமார் 300 வீடுகள் பூமியில் புதைந்தது போல் ஆகிவிட்டது.

அந்த பகுதியில் வாழ்ந்த சுமார் 2000 பேர்களின் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. குறைந்தது 500 பேர்களாவது இந்த விபத்தில் மரணம் அடைந்திருப்பார்கள் என்று மீட்புக்குழுவினர் கூறுகின்றனர். இதுவரை எடுக்கப்பட்ட கணக்கின்படி சுமார் 2000 பேர்களை காணவில்லை. ஆனால் மீட்புக்குழுவினர் இதுவரை ஒரே ஒரு பிணத்தை மட்டுமே கைப்பற்றியுள்ளனர். மீட்புப்பணிகள் மிகவும் துரிதமாக நடந்து வருகிறது

Badakhshan என்ற பகுதியின் கவர்னர் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, விபத்து நடந்த கிராமத்தில் சுமார் 1000 குடும்பங்கள் வாழ்ந்து வந்ததாகவும், அந்த கிராமத்தின் ஜனத்தொகை 2100 என்றும் குறிப்பிட்டுள்ள அவர் சுமார் 100 பேர்கள் மட்டுமே இந்தவிபத்தில் இருந்து தப்பியுள்ளதாகவும், மீதி பேர்களின் நிலைமை குறித்து தாம் மிகவும் கவலை அடைவதாகவும் கூறியுள்ளார்.

இந்த அதிர்ச்சி சம்பவத்தால் நாடு முழுவதிலும் உள்ள மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

Tags: , ,

Leave a Reply