தென்கொரியா தலைநகர் சியோல் நகரில் சுரங்க ரயில் பாதை ஒன்றில் நின்று கொண்டிருந்த ரயில் மீது எதிரே வந்த மற்றொரு ரயில் மோதிய பயங்கர விபத்தில் 170 பேர் வரை காயம் அடைந்துள்ளனர். மீட்புப்பணிகள் மிகவிரைவாக நடந்து வருகிறது. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தென்கொரிய தலைநகர் சியோல் அருகேயுள்ள Sangwangsimni Station என்ற சுரங்க ரயில் நிலையத்தில் ஒரு ரயில் நின்று கொண்டிருந்தது. அந்த ரயிலின் எதிரே வந்த மற்றொரு ரயிலுக்கு கொடுக்கவேண்டிய சிக்னல் திடீரென பழுதுபட்டதால் மிக வேகமாக வந்த ரயில், நின்றுகொண்டிருந்த ரயில்மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் 170 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் 32 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். சிக்னல் பழுதுகுறித்து கவனிக்காத ரயில்வே அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தென்கொரிய ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
சமீபத்தில்தான் தென்கொரியாவில் பயணிகள் கப்பல் ஒன்றி கடலில் மூழ்கி 300க்கும் மேற்பட்டவர்கள் பலியான சம்பவத்தின் பரபரப்பு அடங்கும் முன்பே இன்னொரு விபத்தை தென்கொரிய மக்கள் சந்தித்து உள்ளனர்.
















