கொலையாளியை காட்டிக்கொடுத்த சினிமா போஸ்டர். கேரளாவில் பெரும் பரபரப்பு.

cinema-posterகடந்த 2013ஆம் ஆண்டு நடந்த இளைஞர் ஒருவரின் கொலையில் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு பிரபல இயக்குனர் ஒருவர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் மாலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் நாள் தீபு என்ற இளைஞர் கேரளாவில் உள்ள கோட்டயம் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத சிலரால் அடித்துக்கொல்லப்பட்டு ஏரியில் தூக்கியெறியப்பட்டார். அவரது உடலை போலீஸார் கைப்பற்றி பிரேதப்பரிசோதனை செய்ததில் அவர் கல்லால் அடிக்கபட்டு அடைந்த காயத்தினால் கொல்லப்பட்டதாக தெரிந்தது.

இந்த கொலை பற்றி விசாரனை செய்தபோது நான்கு மர்ம நபர்கள் கார் ஒன்றில் வந்து தீபுவை அடித்து போட்டதாகதெரிந்தது. இந்த கொலையை நேரில் பார்த்தவர்களை பற்றி போலீஸார் விசாரணை செய்து கொலையாளியின் புகைப்படத்தை கம்ப்யூட்டர் உதவியால் வரைந்து கொலையாளியை தீவிரமாக தேடிவந்தனர்.

இந்நிலையில் கடந்த வாரம் மலையாள திரைப்படம் ஒன்றின் போஸ்டர் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தப்பட்டு இருந்தது. அதன் இயக்குனர் சங்கீத் லூயிஸ் அவர்கள் புகைப்படமும் அந்த போஸ்டரில் இருந்தது. கம்ப்யூட்டர் உதவியுடன் வரைந்த கொலையாளி புகைப்படமும், போஸ்டரில் இருந்த இயக்குனரின் புகைப்படமும் ஒத்து இருந்ததால், போலீசார் அவர் மீது சந்தேகப்பட்டு அவரை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவர்தான் தீபுவை கொலை செய்தார் என்பது நிரூபணம் ஆனது. அவருடன் மேலும் நான்கு பேர்கள் இணைந்து இந்த கொலையை செய்துவிட்டு தப்பித்து சென்றது தற்போது தெரியவந்துள்ளது.

இதையடுத்து இயக்குனர் சங்கீத் லூயிஸ் கைது செய்யப்பட்டார். இந்தசம்பவம் கேரள திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Tags: , ,

Leave a Reply