ஆப்கானிஸ்தான் நாட்டின் வட பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 2100ஆக அதிகரித்துள்ளது. வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள பதகசான் என்ற நகரின் அருகே உள்ள ஒரு கிராமத்தின் அருகேயுள்ள ஒரு சிறிய மலை தொடர்ச்சியாக பெய்த கனமழையின் காரணமாக சரிந்து ஒரு கிராமத்தின் மேல் விழுந்தது.
இதனால் அந்த கிராமத்தில் இருந்த சுமார் 300 வீடுகள் பூமியில் புதைந்தன. இதில் முதலில் 350 பேர் பலியானதாக கூறப்பட்டது. இந்த நிலையில் அங்கு பலியானோர் எண்ணிக்கை 2100ஆக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலை சரிவில் சிக்கிய கிராமத்தில் சுமார் 1000 குடும்பங்கள் வாழ்ந்து வந்தன. அந்த கிராமத்தின் மக்கள் தொகை 2100. தற்போது 100 பேர்தான் தப்பியிருக்கின்றனர். இந்த அதிர்ச்சி சம்பவத்தால் ஆப்கானிஸ்தான் நாடு முழுவதிலும் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். மீட்பு பணியில் 30 ஆயிரம் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
















