அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் 18 வயது மாணவன், தன்னுடன் படிக்கும் 18 மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டான். பள்ளி மாணவன் ஒருவன் 18 பெண்களை பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரிசோனா மாகாணத்தை சேர்ந்த ஒரு பள்ளியில் படித்து வரும் Tyler Kost, என்ற 18 வயது மாணவன் கடந்த திங்கட்கிழமை 13 மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக அதிரடியாக கைது செய்யப்பட்டான். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவனுக்கு நீதிமன்றம் ஜாமீன் கொடுத்தது.
ஜாமீனில் வெளிவந்த மறுநாளே மேலும் 5 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவன் மீண்டும் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டான். இம்முறை ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் பல புகார்கள் அவன் மீது வந்துகொண்டிருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
Tyler Kost, மீது 25 பிரிவுகளில் வழக்கு பதிவுச் செய்யப்பட்டிருப்பதாகவும், இது ஒரு மிகவும் சீரியஸான சீரியல் பாலியல் பலாத்காரம் என்றும் Pinal County Sheriff Paul Babeu அவர்கள் கூறினார்.
















